சவுதி அரேபியாவுக்கு முதலிடம்..!
உலகளவில் ஆயுத இறக்குமதி நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா முதல் இடத்தில் உள்ளதாக நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்பான உலகளாவிய புதிய அறிக்கை ஒன்று கூறியுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்துவந்த இந்தியாவை பின்னுக்குத் தள்ளி சவுதி அரேபியா முதல் இடத்தை பிடித்துள்ளது.
முன்னர் ஐந்தாவது இடத்தில் இருந்த சீனா இப்போது மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளதாக ஐஎச்எஸ் என்ற அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்ற சந்தைப் புலனாய்வு நிறுவனம் கூறுகின்றது.
அத்தோடு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இராணுவ தளவாட வியாபாரம் 13 வீதத்தால் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கிலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலும் மோதல்கள் அதிகரித்துள்ள காரணத்தினாலும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் இராணுவ விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாலுமே இந்த வியாபார அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக அமெரிக்கா உள்ளது, அடுத்த நிலைகளில் ரஷ்யாவும் , பிரான்சும் உள்ளன.

Post a Comment