Header Ads



ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் விசேட வர்த்தமானி இன்று வெளியாகிறது

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் யோசனைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று 15-03-2015 இரவு வெளியிடப்பட உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

19வது அரசியல் அமைப்புத் திருத்தமாக வெளியிடப்படும் இந்த வர்த்தமானி அறிவித்தல் வழமை போல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்திய பின்னர் நிறைவேற்றப்பட உள்ளது.

அவசர சட்டமூலமாக இந்த யோசனை கொண்டு வரப்பட மாட்டது. புதிய திருத்தங்களின் அடிப்படையில், நாடாளுமன்றம் ஒன்று தெரிவு செய்யப்பட்ட பின், நான்கு ஆண்டுகள் பூர்த்தியாவதற்கு முன்னர், நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் நீக்கப்பட உள்ளது.

இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படும். முப்படைகளின் தளபதி, அமைச்சரவையின் தலைவர், அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் என்பன ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் இருக்கும். அதேவேளை தேர்தல் முறை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து நீக்கப்படுவதுடன் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலத்தில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற சட்டமும் நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது

No comments

Powered by Blogger.