Header Ads



சவூதி அரேபியாவில் இருந்துவந்த இருவர் கைது

சவூதி அரேபியாவின் ஜெடா நகரில் இருந்து இலங்கைக்கு வந்த இரண்டு வர்த்தகர்கள் 20 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த இந்த வர்த்தகர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று மதியம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனவும் இவர்கள் சவூதி அரேபியாவுக்கு வாரத்தில் 4 முறை பயணிப்பவர்கள் எனவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றிய தங்கத்தின் எடை ஒரு கிலோ கிராமாகும். அவற்றின் பெறுமதி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் ஈச்சம்பழத்திற்கு மறைத்து தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்தியுள்ளனர்.

இவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் அந்நாட்டு விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை திரும்பியுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளை நடத்திய பின்னர், சந்தேக நபர்களையும் தங்கத்தை புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.