டுபாய், சுவிஸ் நாடுகளில் இலங்கை அரசியல்வாதிகளின் பல மில்லியன் ரூபாய் சட்டவிரோத முதலீடு கண்டுபிடிப்பு
.jpg)
சுவிட்சர்லாந்து, உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள வங்கிகளில் முன்னைய அரசாங்கத் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் பல மில்லியன் ரூபாய்களை சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் ரவி கருணநாயக்க இந்த நிதி இலங்கையின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு போதுமானது எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த பணத்தை நாட்டிற்கு திருப்பிக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, ஆரம்பகட்ட விசாரணைகளின் போது இதில் தொடர்புபட்டவர்களின் பெயர்விபரங்கள் கிடைத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2015 இல் வரவுசெலவுதிட்ட பற்றாக்குறை 521 பில்லியன் ருபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணம் இந்த பற்றாக்குறைக்கு 75 வீதம் தீர்வு காண்பதற்கு போதுமானது.
மூன்று நாடுகள் இந்த ஆரம்பகட்ட விசாரணைகளில் ஒத்துழைப்பை வழங்கியுள்ள, குறிப்பிட்ட குற்றவாளிகளின் பெயர் விபரங்கள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்,
சட்ட விரோத பணப்பரிமாற்றம் என்பதன் அடிப்படையிலேயே விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இந்த பணத்தை நாட்டிற்கு திருப்பிக் கொண்டுவரும் முயற்சிகளில் உதவுவதற்காக உலகவங்கியின் விசேட குழுவொன்று இலங்கை வந்துள்ளது. என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment