Header Ads



பாராளுமன்றத்தில் போதைபொருள் மன்னர் ஒருவர் உள்ளார் - அமைச்சர் ஜோன் அமரதுங்க

நாடாளுமன்றத்தில் ஹெரோயின் மன்னர் ஒருவர் இருப்பதாக சட்டம் ஒழுங்கு மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இந்த தகவலலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட மற்றும் அது தொடர்பான குற்றங்களில் தொடர்புடைய முக்கிய நபர்கள் சிலர் கைது செய்யப்படவுள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருளை ஒழிக்க பொலிஸார் முடிந்தளவு அர்ப்பணிப்புடன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இப்படி சொல்வதற்கு முதலில் இவர் வெட்கப்பட வேண்டும். ஹெரோயின் மன்னருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன?

    ReplyDelete
  2. இன்னும் எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்.முடிந்த பாடில்லை

    ReplyDelete

Powered by Blogger.