Header Ads



இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக, பொய் சொல்லப்படுவது இப்படித்தான் (உண்மை சம்பவம்)


(India) நாகாலாந்த் திமாபூர் சிறைச்சாலையிலிருந்து சையத் சரீபுத்தீன் கான் என்ற இளைஞரை பொது மக்களே சிறையை உடைத்து அவரை வெளியே இழுத்து அடித்து கொன்றது ஞாபகமிருக்கலாம். ஒரு பெண்ணை பலமுறை கற்பழித்தார் என்பது இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. இவர் பங்களாதேஷிலிருந்து ஊடுருவியவர் என்று இவரை கொன்றவர்கள் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தனர். இது சென்ற வியாழக் கிழமை நடந்தது.

ஆனால் நேற்றும் இன்றும் செய்திகள் வேறு விதமாக வருகிறது. அஸ்ஸாம் முதல்வர் தருண் 'அந்த பெண் கற்பழிப்பு செய்யப்படவில்லை என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகிறது' என்று சனிக்கிழமை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்றால் அவரை சிறையில் அடைத்தது ஏன்? பெரும் கும்பல் சிறைக் கதவை உடைத்து அவரை கொன்றது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. பல நாட்களாக பல முறை யாராவது ஒரு பெண்ணை கற்பழிக்க முடியுமா? அந்த பெண்ணின் அனுமதியோடுதான் அந்த இளைஞன் அவளோடு சல்லாபித்திருக்கிறான். இந்த செய்தி உண்மையாக இருந்தால் இது ஒரு விபசாரமே. இது கற்பழிப்பல்ல. சம்பந்தப்பட்ட பெண்ணும் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறாள்.

கொல்லப்பட்ட சர்புத்தீன் கானின் சகோதரர் ஜமாலுத்தீன் கான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் பின் வருமாறு கூறுகிறார்:

'இந்த அரசு காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்கிறது. அரசியல் காரணங்களுக்காக எனது சகோதரன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளான். வன் புணர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் எனது சகோதரனின் மனைவியில் பெரியப்பா மகளாவார். நெருங்கிய உறவினர். மருத்துவ அறிக்கையும் இவர் வன்புணர்வு செய்யப்படவில்லை என்று கூறுகிறது. 

அடுத்து எங்கள் குடும்பம் பங்களாதேஷிலிருந்து புலம் பெயர்ந்த வந்தேறிகள் என்ற செய்தியும் பரப்பப்படுகிறது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரையாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களின் தந்தை சையது ஹூசைன் கான் இந்திய விமான படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனது தாயாருக்கு இன்று வரை அதன் பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது. எனது மற்றொரு சகோதரன் இமாமுத்தீன் ராணுவத்தில் வேலை செய்து 1999ல் கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டார். நாட்டைக் காக்க உயிர் துறந்த எனது குடும்பத்தை அநியாயாமாக அந்நிய தேசத்தவர் என்று எப்படி கூறுகிறீர்கள்? நாங்கள் அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாகாணத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம்' என்கிறார்.

நாகா கவுன்சிலின் ஜெனரல் செகரட்டரி ஜோஸ் நாகா கூறுகிறார் 'அவர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தாலும் நம்பப் போவதில்லை. அவர்கள் வந்தேறிகளே' என்கிறார். அதாவது இவர்கள் எதனை நினைக்கிறார்களோ அதுதான் சட்டமாக்கப்பட வேண்டுமாம். கூர்காலாந்து அமைக்க தடையாக இருப்பது முஸ்லிம்களே! சவுதியில் பல நேபாளிகள், நாகாலாந்து மக்கள் பலரும் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர். இது போல் அஸ்ஸாம் நாகாலாந்து நேபாளம் போன்ற மாநிலங்களிலும் மக்கள் இஸ்லாத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர். இது போன்ற சம்பவங்களின் மூலம் இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்தி ஒட்டு மொத்த மக்களையும் இஸ்லாத்துக்கு எதிராக திருப்பி விடும் யுக்தியாகவே இதனை நான் பார்க்கிறேன். 

எப்படியோ கூட்டு மனசாட்சியின் படி அப்ஸல் குருவை தூக்கிலிட்டது போல் ஷர்புத்தீன் கானையும் அடித்தே கொன்று விட்டது இந்திய அரசியல். வாழ்க இந்திய அரசின் கூட்டு மனசாட்சி தத்துவம்.

தகவல் உதவி:
என்டிடிவி
07-03-2015

சுவனப் பிரியன்

No comments

Powered by Blogger.