முஹம்மது நபியை அவமதிக்கும் கேலிச் சித்திரத்தை பாடப் புத்தகத்தில் இணைக்குமாறு கோரிக்கை
முஹம்மது நபியை அவமதிக்கும் சர்ச் சைக்குரிய கேலிச் சித்திரத்தை பாடப் புத்தகத்தில் இணைப்பதற்கு டென்மார்க் ஆசிரியர் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கேலிச்சித்திரம் விரைவில் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று மதக் கல்வி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் கற்பது மத, சமூக மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு இடையிலான உறவை புரிந்துகொள்ள உதவும் என்று அந்த சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
'கல்வித் திட்டத்தில் இந்த விடயம் இன்னும் இணைக்கப்படாதது வியக்க வைக்கிறது" என்று மேற்படி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோன் ரைடால் டென்மார்க் இணையத்தளம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
டென்மார்க் அரசியல்வாதிகளில் சிலர் இந்த பரிந்துரைக்கு ஆதரவளித்துள் ளனர். வலதுசாரி டென்மார்க் மக்கள் கட்சி குறித்த கேலிச் சித்திரம் மதக் கல்வியில் உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் பழைமைவாதிகள் மற்றும் மைய ஜனநாயகவாதிகள் இதனை கட்டாயப்படுத் துவதை எதிர்த்துள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு டென் மார்க்கின் ஜpலான்ட்ஸ்-போஸ்ட் பத்திரிகை பிரசுரித்த கேலிச்சித்திரத்திற்கு எதிராக முஸ்லிம் நாடுகளில் வன்முறை வெடித்தது.

ஒரு கிறுக்கு கார்டூனிஸ்ட் வரையும் ஒரு கேலிச் சித்திரத்தின் மூலம் இறைவனின் தூதரையும், இறைவனின் மார்க்கத்தையும் கேவலப் படுத்த முடியும் என்று நினைப்பதே நாம் இறைவனுக்குச் செய்யும் கேவலமாகும். ஒரு கார்ட்டூன் மூலம் கேவலப் படுத்தப்பட முடியுமான அளவு பலவீனமான நிலையிலேயா இறைவனும் இறைவனின் மார்க்கமும் இருக்கின்றன? ஒன்றை கண்மூடி எதிர்ப்பதற்கு முன், முஸ்லிம்கள் நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ReplyDelete