Header Ads



ஹஜ்ஜாஜிகளுக்கு மட்டும், விதிக்கப்பட்ட All countries passport..?

மஹிந்த ஆட்சியில் உலகமெங்குமில்லாத ஒரு சட்ட முறையை இலங்கையில் ஹஜ்ஜுக்கு செல்லும் எமது பெற்றோர்கள், சகோதர சகோதரிகளுக்கு விதிக்கப்பட்டு அதை அமுல்படுத்தியது. அதுதான் ஹஜ்ஜுக்கடமையை நிறைவேற்ற செல்லும் அனைவரும் All countries passport  பெறப்பட வேண்டும் என்ற சட்டமாகும்.

வருடாவருடம் ஹஜ்ஜுக்கு செல்லும் எமது சமூகத்தவர்களிடம்,(ஹஜ்ஜாஜிகளிடம்) பெறப்படும் இந்தப்பணம் ஒரு வகையான சுரண்டளேயாகும். ஏனைய அன்னிய நாடுகளில் ஹஜ்ஜுக்கு செல்வோருக்கு பல சலுகைகள் வழங்கப்படுவதுண்டு. எமது முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசாங்கத்துக்கு வால் பிடிப்பதே தவிர ஹஜ்ஜாஜிகளுக்கான எந்த சலுகைகளையும் அரசங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக கானப்படவில்லை என்பதை இந்த கடவுச்சீட்டு விடயம் தொடர்பில் முன்வைக்கலாம். இது எமது சமூகத்தில்லுள்ள அரசியல் தலைவர்களின் பெரும் குறையை வெளிப்படுத்துகின்றது.

ஹஜ்ஜாஜிகளுக்காமன All countries passport  வெரும் பணத்தை மட்டும் பெற்றுக்கொள்ள இயற்றப்பட்ட சட்ட விதியே அன்றி, All countries Passport  இல்லாமல் Saudi Arabiaவுக்கு செல்லமுடியாது என்ற சட்டம் இல்லை. இது ஹஜ்ஜாஜிகலுக்கு மட்டுமான சட்டமாகும். மத்திய கிழக்கு நாடுகளுல் ஒன்றுதான் Saudi Arabiaவும் என்பதை நீங்கள் அறிவீர்க்ள். ஏன் இந்த பாகுபாடு. மத வழிபாட்டுக்காக பிரயாணத்தை மேற்கொள்ளுபவர்களுக்கு இந்த அரசாங்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட சேவையாகவும் உயந்தபட்ச விலையாக நிர்ணயிக்க ஏனைய  நிறுவனங்களுக்கு உத்தரவு பிரப்பிக்க வேண்டடுமே தவிர சுயாதீன இலாப னோக்கங்களுக்காக பணத்தை சுரண்டக்கூடாது. இவர்கள் மத வழிபாட்டுக்காக கடமையை மேற்கொள்கிறார்களே அன்றி வியாபார நோக்கமல்ல.

இலங்ககையிலிருந்து Saudi Arabiaவுக்கு தொழில்வாய்ப்புப் பெறச் செல்லும் அனைவரும் All countries passport  வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை. மத்திய கிழக்கிற்கு மட்டும் கடவுச்சீட்டு இருந்தால் போதுமானது. Saudi Arabiaவுக்கு தொழிலுக்கு செல்லும் எந்த ஒரு நபருக்கும் All countries passport பெறவெண்டும் என்ற சட்டம் கிடையாது. ஆனல், எமது ஹஜ்ஜாஜிகளுக்கு மட்டும் ஏன் இந்த பாரிய சுமையை சுமத்துகிறார்கள் என்பதைப் பார்த்தால், நிதிச் சொத்துக்களை தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளவே அரசாங்கம் முனைகிறார்கள். ஹஜ்முகவர்களிடம்  இது தொடபாக கேள்வி எழுப்பிய போது, ஹஜ்ஜாஜிகளை எடுத்துச் செல்லும் போது குறித்த அந்த நேரத்தில் மக்காவில் வைத்து ஏதாவது நோய்வாய்ப்புகள்  ஏற்பட்டால், அவர்களை வேற ஒரு நாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் போகலாம். அதன் அடிப்படையில் அனைவரும் குறிப்பாக ஹஜ்ஜாஜிகள் All countreis Passport எடுக்க வேண்டும் என்று கூறினார். இது மிகவும் வேடிக்கயான சட்டமாகும். இலங்கையில் இருந்து சென்ற ஹாஜிகளை இன்றைய மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர வேற எந்த நாடுகளிலும் தரையிறக்கப்பட்டதாக வரலாறு கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். Saudi government ஹஜ்ஜாஜிகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் இலவசமாக கொடுத்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். சகல இன மதத்தவர்களையும் நன்கு மதிக்கின்ற ஜனாதிபதி மைதிரிபாலவின் ஆட்சியில், ஹஜ்ஜுக்கு செல்கின்ற இலங்கை முஸ்லிம்களுக்கு  குறைந்தபட்ச கட்டணமொன்றை நிர்ணயிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அனைத்து வசதிகளுடன் கூடிய ஹஜ்கடமையை நிறைவேற்றுவதற்கான சகல வசதிகலையும் இந்த அரசாங்கம் செய்து கொடுக்கவேண்டும் என்பதை இந்த நாட்டு முஸ்லிம்கள் சார்பாக ஜனாதிபதியிடம் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம் . எமது ஹஜ்ஜாஜிகளுக்கான All countries passport விதி முறையை நீக்கி, மத்திய கிழக்குகளுக்கான கடவுச்சீட்டில் மாத்திரம் ஹஜ்கடமையை நிறைவாக செய்துமுடிக் ஏற்கனவே அமுலில் இருந்த சட்ட முறையை நடைமுறைப்படுத்துமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

மஹிந்த ஆட்சியில் முஸ்லிம் சமய மேம்பாட்டிற்கான ஒரு அமைச்சர் இருக்கவில்லை. ஹஜ்ஜுக்கான குழுவினரே அவ்வப்போது செய்லபட்டன. அந்த குழுவினர்களில் ஒரு சிலரே எமது ஹஜ்ஜாஜிகளிடம் பணத்தை அறவிடும் செயல்களில் ஈடுபாடு காட்டினர். மாறாக, புனித ஹஜ்ஜுக்கடமையை நிறைவேற்றச் செல்லும் எமது முஸ்லிம் உறவினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போதிய அளவு சலுகைகளை அவர்கள் பெற்று கொடுக்க வேண்டும்.

All countries passport  ஹஜ்ஜாஜிகளுக்கு  மாத்திரம் விதிக்கப்படுவது ஏற்புடையதல்ல. என்பதைப் பற்றி அன்றைய ஹஜ்ஜுக்குழுக்கள் சிந்தித்து செயல்பட தவறிவிட்டனர் என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அன்று நடைமுறைக்கு கொண்டுவந்த அந்த சட்டத்துக்கு காப்பாளராக இருந்து, All countries passportடை எடுக்க வேண்டிய அவசியதை முதன் முதலில் வெளியிட்டவர்களுக்கு அடிவருடியாகவும் இருந்து, நிலைமையை சமாலித்துக் கொண்டும் எமது ஹஜ்ஜுக்குழு அதிகாரிகள் காணப்பட்டனர்.

ஜனாதிபதி  மைதிரி ஆட்சியில் சகல சமூகத்தவர்கலினதும் தனியான சமய, கலாச்சார மேம்பாட்டிற்காக அமைச்சுப் பதவி வழங்க்கியிருப்பதானது  மைதிரி அவர்களின் நல்லெண்னத்தை வெளிகாட்டுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி அரசியல் நோக்கமே அன்றி முஸ்லிம்கலின் கடமைகளில் ஒன்றான ஹஜ் கிரிகை விடயத்தில் தன் மேலாதிக்கத்தை செலுத்த முனைந்தார். அவர் ஜனாதிபதித் தேர்தலுக் கிடையில் மேற்கொண்ட ஹஜ் பிரயாணம் தொடர்பான பிரச்சாரம் அவர் ஆட்சியில் வீழ்ச்சியை தழுவினார். தேர்தலில் வெற்றியீட்டினவராக இருந்தால், ஆட்சியும்  அதிகாரமும் அவரது கையில் தவண்டு கொண்டு இருக்கும். அப்போது எமது ஹஜ்ஜாஜிகளின் நிலைமை கேள்விக்குறியாகவே  இருக்கும். இலாப நோக்கமுடைய அதிகாரிகளின் தலையீடு இன்றி சுயாதீனமாக ஹஜ் செய்யும் நிலைமை எமது மக்களுக்கு கிடைக்குமா..???

7 comments:

  1. Good appreciated that pls all muslim politician focus on this

    ReplyDelete
  2. செல்வந்த நாடான சவூதி அரேபியாவிற்குச் சென்று பல லட்சம் ரூபாய்களை செலவழித்து ஹஜ் செய்கின்றார்கள், இலங்கையில் All country கடவுச் சீட்டுக்கு வெறும் 5 ஆயிரம் ரூபாய்கள்தான் அதிகம், ஆகவே இதனை ஒரு பெரிய விடயமாக கருத வேண்டியதில்லை.

    ஏழைத் தொழிலார்களிடம் இப்படி அறவிட்டு இருந்தால் அது உண்மையில் பேசப்பட வேண்டிய ஒரு விடயமே.
    ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் செல்வந்தர்கள் என்பதனால் இது ஒரு விடயமே இல்லை.

    ReplyDelete
  3. For little star; Do not try to justify not only rich people go for hajj even lots of middle class people go for hajj. It's not about money it's about why they place this cash grab low targeting one community. Because you are rich do you pay Rs1000/2000 extra for all your services?

    ReplyDelete
  4. பணக்காரர்களிடம் அநியாயமாக அறவிட்டால் அது நியாமா இது முஸ்லிம் அவனது கடைமையைச் செய்வதற்குச் செல்வதற்காக விதிக்கப்படும் மேலதிக கட்டணம் இல்லையா? என்ன சொல்ல வருகின்றீர்கள் பௌத்தர்கள் புத்தகாயாவிற்குச் செல்ல விசேட விமானங்கள் இலவச தங்குமிடங்க்ள அமைத்துக் கொடுத்த மகிந்த அரசு முஸ்லிம்களை மேலும் சிலமத்திற்கு உள்ளாக்கியது தப்பில்லையா? முஸ்லிம் பணக்காரர்கள் ஏனைய சமுகத்தின் பணக்காரர்கரள விட நேர்மையானவர்கள் எமக்கு விதிவிலக்கு உள்ளதால் நாம் அவர்களை குறைகாண்கிறௌம் அவர்களுக்கு விதவிலக்கு இல்லை அதனால் அவர்களின் குறைகள் வெளிவருவதில்லை

    ReplyDelete
  5. பணக்காரர்களிடம் அநியாயமாக அறவிட்டால் அது நியாமா இது முஸ்லிம் அவனது கடைமையைச் செய்வதற்குச் செல்வதற்காக விதிக்கப்படும் மேலதிக கட்டணம் இல்லையா? என்ன சொல்ல வருகின்றீர்கள் பௌத்தர்கள் புத்தகாயாவிற்குச் செல்ல விசேட விமானங்கள் இலவச தங்குமிடங்க்ள அமைத்துக் கொடுத்த மகிந்த அரசு முஸ்லிம்களை மேலும் சிலமத்திற்கு உள்ளாக்கியது தப்பில்லையா? முஸ்லிம் பணக்காரர்கள் ஏனைய சமுகத்தின் பணக்காரர்கரள விட நேர்மையானவர்கள் எமக்கு விதிவிலக்கு உள்ளதால் நாம் அவர்களை குறைகாண்கிறௌம் அவர்களுக்கு விதவிலக்கு இல்லை அதனால் அவர்களின் குறைகள் வெளிவருவதில்லை

    ReplyDelete
  6. 5 ஆயிரம் ரூபாய்கள் அதிகம் என்பது one day service இற்குத்தான், சாதாரண சேவை என்றால் வெறும் 1500 ரூபாய்கள்தான் அதிகம்.

    ReplyDelete
  7. அநியாயமாக அரவிடப்படவில்லை. மத்தியகிழக்கு பாஸ்போர்ட்டிட்கு வெறுமனே 5 ஆயிரம் அதிகமாக அறவிட்டால் அது நியாயம்தான், ஆனால் அவர்களுக்கு எல்லா நாடுகளுக்குமான கடவுச் சீட்டு வழங்கப் படுகின்றது, அதற்குரிய கட்டணம்தான் அறவிடப் படுகின்றது. ஹஜ்ஜு முடிந்து அவர்களுக்கு பாங்கொக், லண்டன் போவதற்கு அந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தவும் முடியுமே?

    அடுத்து, ஒரு நாள் சேவை என்றால்தான் 5 ஆயிரம் ரூபாய் அதிகம், சாதாரண சேவை என்றால் 1500 ரூபய் மட்டுமே அதிகம்.

    ReplyDelete

Powered by Blogger.