எங்களை அமெரிக்கா வதைக்கிறது, நாங்கள் என்ன தவறு செய்தோம்..? அதனால் சதிசெயலில் ஈடுபடுகிறோம்
என்னை கைது செய்யாமல் இருந்திருந்தால் , அதிபர் ஒபாமாவை தலையில் சுட்டு கொன்றிருப்பேன்’ என்று அமெரிக்காவில் குண்டுவெடிப்பு சதியில் சிக்கிய கிறிஸ்டோபர் கார்னல் கூறினார். வாஷிங்டனில் சட்டசபை வளாகமான கேபிடால் வளாகம் மற்றும் அருகே உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றை தகர்க்க குண்டுகளை வைக்க சதி செய்தவன் கிறிஸ்டோபர். அவனை அமெரிக்க போலீசார் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். அப்போது அவன் ஃபாக்ஸ் டிவி சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தபேட்டி இப்போது வெளியாகி உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது,
எங்களை ஏன் அமெரிக்கா வதைக்கிறது. நாங்கள் என்ன தவறு செய்தோம்? அதனால் தான் நாங்கள் சதி செயலில் ஈடுபடுகிறோம். நான் கேபிடால் கட்டடம், இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்க திட்டமிட்டேன். குண்டுகளை தயாரித்து அங்கு கொண்டு போய் வைக்க நேரம் பார்த்து கொண்டிருந்தேன். இதை அறிந்த போலீசார் என்னை கைது செய்துவிட்டனர். என்னை மட்டும் அவர்கள் கைது செய்யாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா? கைத்துப்பாக்கியை எடுத்து கொண்டு ஒபாமாவை தேடிச் செல்வேன்.
அவர் தலையில் சுட்டு கொன்றிருப்பேன். அத்துடன் நின்றிருக்க மாட்டேன். செனட், நாடாளுமன்ற சபைகளில் புகுந்து எம்பிக்களை சரமாரி கொன்று குவிப்பேன். அதன் பின், இஸ்ரேல் தூதரகத்துக்கு செல்வேன். முஸ்லிம்களுக்கு எதிராக போர் செய்யும் அந்த நாட்டின் தூதரகத்தில் உள்ளவர்களையும் சுட்டு கொல்வேன். இவ்வாறு கிறிஸ்டோபர் கொக்கரித்தான். இவன் இப்போது அமெரிக்க சிறையில் உள்ளான். அவனை ஜாமீனில் விடுவிக்க முடியாதபடி, கடும் பிரிவுகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Who is this cristhoper
ReplyDelete