ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு 2 வாரங்களில் பதில்
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் இதுவரையில் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற அரசாங்க பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் 65ம் ஆண்டு பொதுச்சபைக் கூட்டத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வது தொடர்பில் காட்டுச் சட்டங்களை அமுல்படுத்த முடியாது. மிகவும் நிதானமான முறையில் நுட்பமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
100 நாள் திட்டத்தில் பல முக்கியமான விடயங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் சம்பளங்களை உயர்த்துமாறு கோரப்பட்டது. எனினும், தற்போது மக்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கோருகின்றனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாகத் தெரிவித்தே நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டோம். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட இதுவரையில் கைது செய்யவில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் பார்க்க முடியும். காட்டுச் சட்டத்தின் ஊடாக எவரையும் கைது செய்து விசாரணை செய்ய முடியாது.
சுகாதாரத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Do not arrest rajapaksha family but arrest who are treachery to country and fraud and bribe , theft money of this country
ReplyDelete