Header Ads



தேசிய அரசில் சுதந்திரக் கட்சிக்கு 14 அமைச்சுப் பதவிகள் - சிங்கள ஊடகம் தகவல்

தேசிய அரசில் சுதந்திரக் கட்சிக்கு 14 அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில முக்கியமான அமைச்சுப் பதவிகளை கோருவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

தேசிய அரசில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க நியமிக்கப்பட்டுள்ள குழு, இது குறித்து பேச்சு நடத்தவுள்ளது.

கல்வி, சமுர்த்தி, அரச நிர்வாகம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய சில அமைச்சுக்களை தமக்கு வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாக நடவடிக்கைகளுக்கு முக்கியமான அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஏற்கனவே ஆரம்ப இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.