Header Ads



கத்தார் வாழ் நிக்கொள்ள, சகோதரர்களின் ஒன்று கூடல்

கத்தர் வாழ் நிககொள்ள சகோதரர்களின் நலன்புரி அமைப்பான 'அம்வான்' அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 12.02.2015 (வியாழக்கிழமை) இரவு 9:30 முதல் கொழும்பு ரெஸ்டுரண்ட்ஸ் (பர்வா விலேஜ் கிளை) யில் இன்ஷா அல்லாஹ் இடம் பெறும் என்னும் மகிழ்ச்சியான தகவலை அதன் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

எனவே, கத்தர் வாழ் நிககொள்ள சகோதரர்கள் அனைவரும் இச்சந்திப்பில் தவறாது கலந்து சிறப்பிக்குமாறும் அமைப்பின் இலக்கான கல்விப் பணியில் தடம் பதித்துள்ள மாணவர்களினதும் பாடசாலை, மத்றஸாக்களினதும் உயர்வுக்கும் வளர்ச்சிக்குமான பங்களிப்புக்களிலும் துணை நிற்றலிலும் பங்கெடுக்குமாறும் அன்பாக வேண்டப்படுகின்றனர்.

மேற்படி அமைப்பு நிககொள்ளயிலுள்ள பாடசாலை, மத்ரஸாக்கள், பாலர் பாடசாலை போன்றவற்றையும், ஷரீஆத் துறை மற்றும் மேற்படிப்பைத் தொடரும் மாணவர்களையும் இலக்காhகக் கொண்டு செயற்படும் ஓர் அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பல்வேறுபட்ட வேலைப்பலுக்களுக்கு மத்தியிலும் இவ்வூர் சகோதரர்கள் கல்விப் பணிக்காக தம்மாலான பங்களிப்பினைச் செய்து வருகின்றனர் என்பது விஷேடமாக குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அஷ் ஷைக் ஷஹீர் பஜீர் (நளீமி).
பொதுச் செயலாளர்,
'அம்வான்' கத்தர்.

No comments

Powered by Blogger.