Header Ads



அல் ஹைதாவின் பெயரை மாற்ற விரும்பிய, ஒஸாமா பின்லேடன்

உலகளாவிய பயங்கரவாத அமைப்பு என்று அல்-கொய்தா அங்கீகாரம் செய்யப்பட்ட அதிருப்தியில், அமைப்பின் பெயரை ஒசாமா பின்லேடன் மாற்ற விரும்பினார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன். இந்த பின்லேடன் பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி, அமெரிக்க ராணுவம் ”ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்து கொன்றது.

இந்நிலையில் உலகளாவிய பயங்கரவாத அமைப்பு என்று அல்-கொய்தா அங்கீகாரம் செய்யப்பட்ட அதிருப்தியில், அமைப்பின் பெயரை ஒசாமா பின்லேடன் மாற்ற விரும்பினார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழப்பதற்கு முன்னதாக அல்-கொய்தா அமைப்பின் பெயரை இஸ்லாமுடன் மிகவும் நெருக்கம் கொண்டது என்பதை அடையாளம் காட்டும் விதமான பெயரை வைக்க பின்லேடன் விரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்டோட்டாபாத்தில் ஒசாமா பின்லேடன் மறைந்திருந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

ஆளெடுப்பு முயற்சி, தங்கள் கொடியினை நாட்டுவதில் வெற்றியடை இது உதவியாக இருக்கும் என்று ஒசாமா பின்லேடன் எண்ணியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.