இது சிக்கல் மிகுந்த அரசாங்கமாகும், தொடர்ந்து நீடிக்காது - அனுரகுமார திஸாநாயக்க
அரசாங்கம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (10) நிட்டம்புவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது கருத்துத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 136 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 136 உறுப்பினர்கள் இருக்கும் போது 60 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் ரணில் விக்ரமசிங்க பிரதமராக உள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவுள்ளார். தொடர்ந்து இவ்வாறு செல்ல முடியாது. 100 நாள் திட்டத்தை முன்னெடுக்க நாம் முயற்சி செய்கின்றோம். இது சிக்கல் மிகுந்த அரசாங்கமாகும். இது தொடர்ந்து நீடிக்காது. எனினும், இதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய காலமொன்று உள்ளது.
என்றார்.
அத்துடன், அரசியலமைப்பில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்ட அவர், முதலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
.jpg)
எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது.
ReplyDeleteஊழல்களை விசாரித்து ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு எதிர்பாராத சில அரசியல் ஆச்சரியங்கள் ஏற்பட்டன. மூர்க்கமாக எதிர்க்க வேண்டிய முன்னாள் ஜனாதிபதியின் கட்சி ஆட்கள் சரணாகதியடைந்தமை ஒர் முக்கியமான திருப்பம். (அவர்கள் இணங்கியது உள்ளுர சதி எண்ணத்தோடு என்பது வேறுவிடயம்) .
இதுவே தற்போது ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளில் குழப்பமேற்பட அல்லது அவ்வாறான ஒரு தோற்றம் ஏற்பட காரணமாக அமைந்திருக்கின்றது. இந்தக் குழப்பத்தை அல்லது சிக்கலை எவ்வாறு சமாளிக்கப் போகின்றார்கள் என்பதுதான் இன்றைய அரசியல் அவதானிகளின் ஆர்வமே.
'எதிரிகளை நான் பார்த்துக் கொள்கின்றேன். நண்பர்களிடமிருந்து காப்பாற்று ஆண்டவனே' என்ற கோரவேண்டிய நிலைமை ஆட்சியாளர்களுக்கு வந்துவிடாமலிருக்க வேண்டும் என்பதுதான் எனது பிரார்த்தனை.