Header Ads



எனது சகோதரர் நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை - நாமல் ராஜபக்ஷ

-tm-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையில் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான  யோஷித  ராஜபக்ஷ, டுபாய்க்கு பயணமாகியுள்ளார்.   கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் பயன்படுத்தும் வழியூடாக செவ்வாயக்கிழமை (10) இரவு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே 653 என்ற விமானத்திலேயே அவர் டுபாய் பயணமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இது தொடர்பில் கருத்து தெரிவித்த யோஷித ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, 

தனது சகோதரர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்றும் குறிப்பிட்டார்.  பாதுகாப்பு அமைச்சில் சாதாரண பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய விடுமுறை அனுமதியினைப் பெற்றுக்கொண்டே தனது சகோதரர் தனிப்பட்ட காரணத்துக்காக டுபாய் சென்றார் என்றும் நாமல் எம்.பி மேலும் கூறினார்.  

1 comment:

  1. ஒருவேளை, இங்குள்ளவர்களில் நம்பிக்கையிழந்த காரணத்தால், டுபாயிலுள்ள சோதிடர்களை முயற்சிக்கின்றார்களோ என்னவோ..?

    ReplyDelete

Powered by Blogger.