Header Ads



தேசிய அரசாங்கத்தின் தலைவர் மைத்திரிபால, என்பதை ரணில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்

பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் அதி­காரம் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு இல்லை என்று தெரிவித்துள்ள ஜாதிக ஹெலஉறுமய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே இன்னும் நிறை­வேற்று அதி­கா­ரத்தை கொண்­டுள்ள­தா­கவும் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்­டத்­தினை செயற்­ப­டுத்­தவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்­கப் பாட்­டினை மேற்­கொண்­ட­தாகவும் அதற்காக அந்தக்கட்சிக்குப் பின்னால் செல்லவேண்டும் என்ற அவசியமில்லை என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
 பத்­த­ர­முல்­லையில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அக்கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறியதாவது;

ஆட்சிப் பாதை­யினை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய தேவை ஏற்­பட்ட போது எமக்கு இருந்த ஒரே வழி­முறை தேசிய அர­சாங்­கத்­தினை அமைப்­பது மட்­டுமேயாகும். அதற்­காக இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைய வேண்­டிய தேவை இருந்­தது. ஆனால் இதில் யார் பல­மா­ன­வர்கள் யார் அர­சாங்­கத்­தினை அமைக்க தகு­தி­யா­னவர் என்­ப­தற்கு அப்பால் மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை மாற்றி நாட்டின் திசை­யினை மாற்­றி­ய­மைக்­கவே அனை­வரும் ஒன்­றி­ணைந்தோம் இன பாகு­பா­டு­க­ளுக்கு அப்பால் அனைத்து கட்­சி­களும் ஒரு அணியில் புரிந்­து­ணர்­வுடன் இணைந்து கொண்டோம். அதேபோல் நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்­தினை ஆரம்­பித்து மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­று­தி­க­ளையும் வழங்­கினோம். எனவே கட்சி பேதத்­தினை மறந்து முதலில் நாம் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும். அதே போல் நூறு நாள் வேலைத்­திட்­டத்தின் பின்னர் நாம் தொடர்ந்தும் தேசிய அரசில் பய­ணிக்க முடி­யாது. பொதுத் தேர்­தலில் தனித்து போட்­டி­யிட்டு ஆட்­சி­ய­மைக்க வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. அதற்கு சகல கட்­சி­களும் தயா­ராக உள்­ள­தா­கவும் கட்­சிகள் தெரி­வித்­துள்­ளன. எனவே மக்கள் தெளி­வான தீர்­மா­னங்­களை எடுக்கும் வரை­யிலும் தேசிய அர­சாங்­கத்­திலும் தனித்து கட்­சிகள் போட்­டி­யி­டு­வ­திலும் சிக்­கல்கள் எவையும் ஏற்­ப­டாது.

இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­வ­தாக ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேள்வி எழுப்­பிய போது தேசிய அர­சாங்கம் அமை­யப்­பெற்­றுள்­ளது.

ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். ஆனால் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் இன்னும் குறைக்­கப்­ப­ட­வில்லை. நூறு நாட்கள் முடியும் வரையில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் நீக்­கப்­பட போவ­தில்லை. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினல் பாரா­ளு­மன்­றினை கலைக்­கவோ அல்­லது அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­தவோ அதி­காரம் இல்லை. அதேபோல் ஊடகங்களை எச்சரிக்க எவருக்கும் அதிகாரமில்லை. இவர்கள் தனித்து பயணிக்க விரும்புவாராயின் அது பொதுத் தேர்தலின் பின்னரே முடியும். அதுவரையில் தேசிய அரசாங்கம் மட்டுமே இயங்கும். அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.