Header Ads



இலங்கை இராணுவத்தின் செல்லப்பிராணியான சிங்கம் உயிரிழந்தது - சமய கிரியைகளுடன் நல்லடக்கம் (படம்)

-Vi-

இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படையணியின் செல்லப்பிராணியான குகர் என்ற சிங்கம் உயிரிழந்துள்ளது.

1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் முதலாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த குறித்த சிங்கம் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா  பண்டாரநாயக்க குமாரதுங்கவினால்  இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படையணிக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இதனையடுத்து சிங்க ரெஜிமென்ட் படையணியின் செல்லப்பிராணியாக இருந்து வந்த குகர் என்ற குறித்த சிங்கமானது தனது 18ஆவது வயதில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து சிங்கத்தின் உடல் சமய கிரியைகளுடன் சிங்க ரெஜிமென்ட் மத்திய நிலைய வளாகத்தில் நல்லக்கம் செய்யப்பட்டது.


No comments

Powered by Blogger.