Header Ads



பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது ஐக்கிய தேசிய கட்சி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அந்த கட்சி நாடு முழுவதும் விரிவான பிரச்சார வேலைத்திட்டங்களை  ஆரம்பித்துள்ளது.

பொதுத் தேர்தலில் மக்களின் பொருளாதாரத்தை அதிகரிப்பதை இலக்காக கொண்டு புதிய பொருளாதார கொள்கையுடன் கூடிய தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலுக்கு தற்போதே தயாராகி வருவதாகவும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்து வருவதாகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 20 ஆம் திகதி கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் ஜனஜய-02 வேலைத்திட்டத்தை ஆரம்பித்து, கிராமம், கிராமமாக சென்று அந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் ஊழல், கொள்ளையடிப்புகளை ஒழித்து மனித வளத்தை அபிவிருத்தி செய்யும் பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றும் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.