Header Ads



வீரர்களுக்கு உதவ, தக்காளி ஜூஸ் ரோபோ

ஜப்பானில் நாளை உலக அளவில் மராத்தான் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் மராத்தான் வீரர்கள் சோர்வடையும்போது ஊட்டச்சத்து மிக்க தக்காளியை வழங்கும் ரோபோ ஒன்றை ஜப்பானிய பழச்சாறு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.ஒருவர் நடந்து கொண்டே கண்கள் வழியாக பல்வேறு இணையதள பக்கங்களை பார்க்கும் வகையில் ரோபோ மூக்கு கண்ணாடியை கூகூள் நிறுவனம் தயாரித்தது. அதைத் தொடர்ந்து, ஒருவர் தான் கட்டியிருக்கும் வாட்ச் மூலம் இணையதளங்களை இயக்கும் ரோபோ வாட்சை ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வழங்கியது.இதைத் தொடர்ந்து, ஜப்பானில் நடைபெறும் மராத்தான் போட்டியில் வீரர்கள் ஓடும்போது சோர்வு ஏற்பட்டால், அவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய தக்காளியை வழங்கும் ரோபோவை ககோமி பழச்சாறு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று டோக்கியோ நகரில் நடைபெற்றது.

மெய்வா டென்கி எனும் பெட்டிட் டொமட்டோன் எனப்படும் இந்த தக்காளி ரோபோவை ககோமி நிறுவனத் தலைவர் சிஜினோரி சுசுகி அறிமுகப்படுத்தினார். குழந்தைகளை தோளில் மாட்டி சுமந்து செல்வதைப் போல், குறைந்த எடையுள்ள இந்த ரோபோவை ஓட்டப்பந்தய வீரர்கள் சுமந்து செல்லலாம். தங்களுக்கு சோர்வு ஏற்படும்போது, தங்கள் கால் ஷூவில் பொருத்தப்பட்ட பட்டனை அழுத்தினால், ரோபோ தன்னிடம் உள்ள 6 தக்காளிகளில் ஒன்றை எடுத்து, சுத்தம் செய்து, அதை இயந்திர கை வழியாக ஓட்டப்பந்தய வீரரின் வாய்க்கு கொண்டு செல்லும்.

ஓட்டப்பந்தய வீரரும் அந்த பழத்தை மென்று தின்றபடியே தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கலாம், அல்லது, தக்காளியை ஜூஸாக பிழிந்து குழாய் வழியாக குடிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதன் சோதனை ஓட்டம் இன்று (21-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் ரோபோவை கண்டுபிடித்த நோவ்மிச்சி தோசா ரோபோவை சுமந்தபடி 5 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறார்.பின்னர், நாளை டோக்கியோவில் நடைபெறும் மராத்தான் போட்டியில் குறிப்பிட்ட சில ஓட்டப்பந்தய வீரர்களுக்கு இந்த ரோபோ வழங்கப்படும். இந்த முயற்சி வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம் என ககோமி நிறுவனத் தலைவர் சிஜினோரி சுசுகி மகிழ்ச்சியுடன் கூறினார்.

No comments

Powered by Blogger.