முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை - பிரதமர் ரணிலிடம் முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை கையளிப்பு
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை ஒன்றினை கையளித்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் செயலாளரும் சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹஸன் அலி கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் காணிகள் இராணுவம் மற்றும் கடற்படையினர் கூட கையகப்படுத்தியிருந்தனர். யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணமாக தங்களது சொந்த இடங்களை விட்டு முஸ்லிம்கள் வெளியேறிய போது அவர்களது நிலங்களை வேறு தரப்பினர் தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அதற்கான தீர்வினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நியாயம் கிடைக்குமென நம்புகிறோம்.
இதேவேளை நூறு நாட்கள் திட்டத்தின் பின்னர் அமையவுள்ள அரசாங்கத்திடமே நாம் எமது மக்களின் மேலும் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம். இதில் பிரதானமாக கல்முனை கரையோர மாவட்ட விடயம் உள்ளடங்கும். அதனையும் அரசாங்கம் நிறைவேற்றித்தருமென நாம் நிச்சயமாக நம்புகிறோம்.
ஏனெனில் கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகுந்த அக்கறை கொண்டவர். கடந்த காலத்தில் கூட இந்த விடயத்தில் அவர் தனது நல்லெண்ணத்தை வெளியிட்டிருந்தார் என்றும் ஹஸன் அலி தெரிவித்தார்.
கெளரவ ரணில் விக்கிரமசிங்க பா.உ பிரதமமந்திரி ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசு
100 நாள் வேலைத்திட்டமும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆலோசனைகளை அமுலாக்கலும், கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக காணி உரிமைகள் பறிக்கப்பட்டமை. கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக காணி உரிமைகள் பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமான மேலான உங்கள் கவனத்தை ஈர்க்க விழைகின்றேன். குறிக்கப்பட்ட காணிகள் பற்றிய சில விபரங்களை இத்துடன் இணைத்துள்ளேன். இக்காணிகள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சொந்தக்காரர்களால் பண்படுத்தப்பட்டு தொடராக பராமரிக்கப்பட்டு விவசாயம் செய்கை பண்ணப்பட்டு வந்தமையாகும்.
ஆனால் தற்போது சொந்தக்காரர்களுக்கு காணிகளை பாவிக்கும் உரிமைகள் பலாத்காரமாக முறைகேடாக மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும் சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த அநியாயம் பற்றி பலமுறைகள் முறையிட்டும் எவ்விதமான விமோசனங்களையும் பெற்றுக்கொள்ள மக்களால் முடியவில்லை. காணிகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் தோல்வியைத் தழுவிக்கொண்ட அப்பாவி மக்களும் அவர்களது குடும்பத்தினரும் மோசமான விளைவுகளை விரக்தியுடன் அனுபவித்து வருகின்றனர்.
எனவே கடந்த மூன்று தசாப்தங்களாக தங்களால் பண்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு விவசாயம் செய்து வரப்பட்ட காணிகளுக்கான உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுவது தொடர்கின்றது. உரிய அதிகாரிகளின் உதாசீனப் போக்கே இவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டதற்கான காரணமாகும். நமது அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் நாம் பின்வரும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம்.
பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்த மக்கள் எல்லோருக்கும் வீடுகளும், காணிகளும் வழங்குவோம். நாம் செயற்படுத்துவதாக பொருந்திக்கொண்ட மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பின்வரும் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கான காணிகளுக்கு சட்டபூர்வமான உரிமைகளை வழங்குதல், (பரிந்துரை 5:132) பயங்கரவாதத்தால் வெளியேற்றப்பட்ட கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுத்தல் (பரிந்துரை 8.6)
எனவே மிக அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின் மூலமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக நாம் பெற்றுக்கொண்ட மக்கள் ஆவணங்களின் விவகாரம் எமது காணியில் பிரச்சினைகளுக்கான விமோசனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையாக உடனடியாக சகல அதிகாரிகளும் கொண்ட ஒரு விசேட ஆணைக்குழுவினை நிறுவுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தங்களை உரிமையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அறிவித்தலை வெளியிடுவதற்கு முன்னர் மேல் கூறப்பட்ட ஆணைக்குழுவின் மக்களின் குறைகளைக் கேட்டதுடன் அவர்களுக்கு அநியாயங்கள் இழைக்கப்பட்டதால் அவை பற்றி விசாரணை செய்வதற்கும் அடாத்தாக பறிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்குமான பணிகளை பூர்த்தியாக்க வேண்டும் என்பது எமது வேண்டுதலாகும்.
நன்றி
எம்.ரி. ஹஸன் அலி.
.jpg)
Post a Comment