Header Ads



இரண்டு பேருக்கு, மரண தண்டனை

மாத்தறை - வெலிகம பிரதேசத்தில், ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய 19-02-2015 தினம் மாத்தறை மேல் நீதிமன்றில் இடம் பெற்ற போதே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த துப்பாக்கி சூட்டு கொலை சம்பவம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

இதேவேளை, 5 கிராம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.