Header Ads



புதிய அரசியலமைப்பும், சிறுபான்மையினரும் பற்றிய கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பும் சிறுபான்மையினரும் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 04.30 மணிக்கு கொழும்பு 07 லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் தலைமையில் நடைபெறும்.

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா எற்பாடு செய்துள்ள இந்த கலந்துரை யாடலில் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸின் நெறிப்படுத்தலில் நடைபெறும்.

தமிழர் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். ஸுஹைர், ஜனாதிபதியின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் வளவாளர்களாகப் பங்குபற்றவுள்ளனர்.இதில் கலந்து கொள்ள விரும்பு வோர் முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர் அஸ்கர்கானுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர். தொ. பேசி. இல :0777572935

No comments

Powered by Blogger.