தேசிய அரசாங்கத்தை விரும்பும் ரணில், தனித்து ஆட்சியமைப்பதை விரும்பவில்லை..!
பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தாம் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலின் பின்னர் அனைத்துக்கட்சி அரசாங்கமே உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் இன்று இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ரணில், நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டியது அனைத்துக் கட்சிகளினதும் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
பொதுமக்கள் தம்மிடம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அல்லது மஹிந்த எதிர்ப்பு அரசாங்கத்தையா அமைக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி கேட்கின்றனர்.
எனினும் தம்மை பொறுத்தவரை நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் தமது அரசாங்கத்துக்குள் இருப்பதையே விரும்புவதாக ரணில் மாணவர்களின் கரகோசத்துக்கு மத்தியில் குறிப்பிட்டார்.
போரின் பின்னர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமையாக உள்ளது.
இந்தநிலையில் தம்மை பொறுத்தவரையில் அனைத்து அரசியல் கட்சிகளுடன் பணியாற்றுவதே சவாலாக உள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
.jpg)
Post a Comment