Header Ads



இரவு நேரத்தில் சிறிகொத்தாவிற்கு, அநுரகுமார திசாநாயக்கா செல்வது ஏன்..?

இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகளை மோதலை ஏற்படுத்தும் நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் முயற்சிப்பதாக ஜே.வி.பியின் மாற்றுக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறான முயற்சிகளுக்கு அனுமதிக்காமல் இலங்கையின் நட்பு நாடுகளைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜே.வி.பி மாற்றுக்குழுவின் இணைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுருத்த கட்டுகம்பொல தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக மேலைத்தேய நாடுகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளே இலங்கைக்கு ஆதரவாக மேலைத்தேய நாடுகளுக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்திருந்ததாக அவர் கூறினார். ஜே.வி.பி மாற்றுக் குழுவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பு தேசிய புத்தகசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இரவு நேரத்தில் சிறிகொத்தாவிற்குச் சென்று ரணில் கேட்கவேண்டிய கேள்விகளை எழுதிக்கொடுத்துவிட்டுவரும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, பகல் வேளைகளில் மேடைகளில் ஏறி ஐ.தே.கவை விமர்சிக்கின்றார். வருடம் ஒன்றுக்கு 15ற்கும் அதிகமான ஜே.வி.பி உறுப்பினர்கள் சீனாவுக்குச் சென்று அங்கு பல சிறப்புரிமைகளைப் பெறுகின்றனர். அவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து சீனாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஒவ்வொரு முறையும் அரசாங்கம் உருவாவதற்கு ஜே.வி.பி.யினர் பக்கபலமாக இருக்கின்றனர்.

ஆனால் அரசாங்கத்தில் பங்கேற்பதில்லை. காரணம் அவர்களுக்குப் பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற முடியாது. மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றியிருந்தவர்களே அவரின் தோல்விக்கு காரணமானார்கள். அதேபோல மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆவதற்கு உழைத்தவர்களே அவரை அழிப்பதற்கும் முயற்சிப்பதாக கட்டுகம்பொல மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.