Header Ads



கொழும்பு தேசிய மருத்துவமனை, வெளிநோயாளர் சிகிச்சை நேரம் இரவு 10 மணிவரை நீடிப்பு


கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவின் சிகிச்சை சேவைகள் இன்று 16-02-2015 தொடக்கம் இரவு 10 மணிவரை செயற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவமனையில் மாத்திரம் இந்த சேவையை முதல்கட்டமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஏனைய மருத்துவமனைகளிலும் இந்த முறைமையை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமானால் நோயாளர்களுக்கு கூடிய சேவையை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை குறித்த வெளிநோயாளர் பிரிவு செயற்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.