விஷ ஊசி போடப்பட்டு, மரண தண்டனைபெறும் பெண்ணின் விசித்திர ஆசைகள் (பட்டியல் இணைப்பு)
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் 70 வருடங்களுக்கு பிறகு பெண் ஒருவருக்கு விஷ ஊசி கொடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. அந்த குற்றவாளியின் பெயர் கெல்லி. மோசமான காரணத்திற்காக மிகக்கொடூரமான முறையில் ஒருவரை கொலைசெய்ய தூண்டியது தான் அவர் செய்த குற்றம்.
ஜார்ஜியாவில் வசித்து வருபவர் கெல்லி. இவரது கணவர் டக்ளஸ். ஓவன் என்ற வோறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்த கெல்லி, தான் இல்லாத நேரத்தில் தன் கணவனைக்கொன்று விடுமாறு ஓவனிடம் கூறியுள்ளார். முதலில் மறுத்த ஓவனை தனது கிறங்கடிக்கும் காதலால் பேசி சம்மதிக்க வைத்துள்ளார். மேலும் தன் கணவனை கொலை செய்வது எப்படி என்று திட்டமும் தீட்டிக்கொடுத்திருக்கிறார்.
கெல்லியின் திட்டப்படி, அவர் தோழிகளுடன் டான்ஸ் ஆடச்சென்றிருந்த நேரம் டக்ளஸை கடத்திய ஓவன், டக்ளசின் காரிலேயே அவரை ஒரு காட்டு பகுதிக்கு கொண்டு சென்று, பின்னந்தலையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். பின் அவரது காரை கொளுத்தி விட்டு காட்டு விலங்குகளுக்கு தீனியாக அவரது உடலை போட்டு விட்டு தப்பி ஓடினார்.
கணவனின் இன்ஸூரன்ஸ் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் அவரைக்கொலை செய்யும்படி கெல்லி கூறியுள்ளார். ஆனால், அவர் இன்ஸூரன்ஸ் எதுவும் போடவில்லையென்பது அவர் இறந்த பிறகுதான் கெல்லிக்கு தெரிய வந்தது. இதற்கிடையே அப்ரூவராக மாறிய ஓவன், கெல்லியை பற்றி போலீசில் போட்டுக்கொடுத்து வழக்கிலிருந்து தண்டனையின்றி தப்பினார்.
1997-ம் ஆண்டு நடந்த இந்த கொலை வழக்கின் விசாரணை முடிவடைந்து 1998-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. கெல்லியின் குற்றம் நிரூபணமானதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு வருகிற 25-ம் தேதி விஷ ஊசி போட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், அவர் தனது கடைசி ஆசையாக தான் சாப்பிடுவதற்கான ஒரு உணவுப்பட்டியலை கொடுத்துள்ளார். அதை பார்த்த சிறை அதிகாரிகளுக்கு தலை சுற்றியது. 2 பெரிய சைஸ் சீஸ்பர்கர்கள், பல வறுவல்கள், இவற்றை சிறப்பிக்க மோர், பாப்கார்ன், எலுமிச்சை மற்றும் வேகவைத்த முட்டை, தக்காளி, மணி மிளகுத்தூள், வெங்காயம், கேரட், சீஸ், கார்ன்பிரெட் இவற்றுடன் இனிப்பான ஒரு செர்ரி வெண்ணிலா ஐஸ்கிரீமும் அவருக்கு வேண்டுமாம்.
.jpg)
Post a Comment