மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னணி சோசலிச கட்சியினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவசர காலச் சட்டத்தை வேறும் வழியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தொடர்ச்சியாக அமுல்படுத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற்ற தினமன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கொழும்பின் முக்கிய நிலைகளில் இராணுவத்தை நிலைநிறுத்தியதாகவும், இது சட்டவிரோதமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தல் ஆணையாளரின் அனுமதியின்றி அவரிடம் அறிவிக்காது இராணுவத்தை நிலைநிறுத்தியது சட்டவிரோதமானது எனத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்pய போதிலும் வேறும் வழியில் தொடாச்சியாக அதனை அமுல்படுத்தி வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவசர காலச்சட்டத்தை நீக்கிய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக காண்பித்துக் கொண்ட போதிலும், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12ம் சரத்தின் அடிப்படையில், முப்படையினருக்கும் காவல்துறை அதிகாரங்களை வழங்கி நாடு முழுவதிலும் தேவையான நேரத்தில் படையினரை அழைத்து கடமையில் ஈடுபடுத்த மஹிந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது என குறிப்பிட்டுள்ளது.
சாதாரண சூழ்நிலைகளில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்புக்கள் காவல்துறையினருக்கே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய படையினரை அழைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
எனினும், கடந்த மஹிந்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்கியதாக பகிரங்கமாக அறிவித்த போதிலும், மறுபுறத்தில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக காவல்துறை அதிகாரங்களை படையினருக்கு வழங்கி, மக்களை இராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சி செய்து வந்ததாக முன்னணி சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
படையினருக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கும் வகையில் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நாட்டின் அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே இதற்கான முதன்மை பொறுப்புதாரி எனவும் முன்னணி சோசலிச கட்சியினர் குற்றம் சுமத்தி மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
.jpg)
Post a Comment