சுஹைர் கடமையேற்றார்
இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான பி.பி. அபேகோனும், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். சுஹைர்ரும் தமது கடமைகளை நாரஹென்பிட்டியிலுள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று பொறுப்பெடுத்தனர்.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ¤ஹைர் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்டு கடமைகளை ஆரம்பிப்தைப் படத்தில் காணலாம்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத் தலைவர் குமார சிங்க சிறிசேன, ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் உறுப்பினர் பண்டார திஸாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் உத்தியோகத்தர்களுடனும் பணிப்பாளர் நாயகம் கலந்துரையாடினார்

Post a Comment