Header Ads



புத்தளத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவது தொடர்பில், கொழும்பில் கலந்துரையாடல்

கொழும்பில் வாழ்கின்ற  புத்தளம் சமூக ஆர்வலர்களினால்  ஒரு கலந்துரையாடல் மூலம்  சில முடிவுகள் கலந்தாலோசிக்கப்பட்டது.

 பிரேரணை 01.   சுயேட்சை பொதுக்குழுவொன்று உருவாக்கி அதில் அனைத்து கட்சியிலுள்ள வாக்கு வங்கிகளையுடைய பிரதான வேட்பாளர்களை களமிறக்கி, அரசியல் ஆர்வமுள்ள குழுக்களையும் இணைத்து பெரிய பள்ளியின் ஷூரா அடிப்படையில் மக்களின் ஆதரவோடு ஒரு பலமான சுயேச்சை கட்சியாக களமிறக்கி ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை   வென்றெடுத்தல் . (வென்ற  பிரதிநிதி தன்னுடைய கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவும் முடியும்)

பிரேரணை 02. புத்தள அரசியலில் எந்த கட்சிக்கு மற்றும் எந்த வேட்பாளருக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றதென ஒரு ஆய்வொன்றினை மேற்கொள்ளல்.

பிரேரணை 03. முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் எமது ஊரின் எதிர்கால் அரசியல் குறித்து கொழும்பிலும், புத்தளத்திலும் இரண்டு இராபோசன உணவுடன் கலந்துரையாடல்.

பிரேரணை 04. இதனைத்தொடர்ந்து புத்தளத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்படுத்தல். 

இந்த விடயம் சம்பந்தமாக ஒரு குழுவொன்று ஏற்படுத்தப்பட்டு அதன் பொறுப்பாளராக சகோதரர்  இல்ஹாம் மரிக்கார் அவர்களும், மற்றும் சகோதரர் ஜவாகிர் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

C.B.S. Ilham

No comments

Powered by Blogger.