Header Ads



மைத்திரிக்கும், ரணிலுக்கும் கடிதம் அனுப்பியுள்ள பசீர் சேகுதாவூத்

வட, கிழக்கில் காணாமற்போன அனைவரையும் தேடித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இன்று (6)அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வெளிவந்த பல்வேறு தகவல்களுடன், வடக்கில் கைதான பலர் இரகசிய முகாம்களில் இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இந்த விடயங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக பசீர் சேகுதாவூத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 2009 ஆம் ஆண்டு படையினரால் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் ஈரோஸ் அமைப்பின் பொதுக் குழுத் தலைவரும், ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவருமான வே. பாலகுமார் மற்றும் அவரது மகன் சூரியதீபன் ஆகியோரைக் கண்டுபிடிப்பதில் நேரடியாக தலையிடுமாறு அவர் கோரியுள்ளார்.

வே. பாலகுமாரன் அமைப்புச் சார்ந்த செயற்பாட்டாளர் அல்ல எனவும், அவரது மகன் எந்தத் தருணத்திலும் ஆயுதமேந்தி போராடவில்லை எனவும், வன்னியில் தொலைத்தொடர்பு நிலையமொன்றில் பணியாற்றியவர் எனவும் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடி கண்காணிப்பு, கரிசனையூடாக குறித்த இருவரையும் கண்டுபிடித்துத் தருமாறும் பசீர் சேகுதாவூத் தமது கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

5 comments:

  1. ஆகா... வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது. தமிழ் அரசியல் வாதிகளும் தமிழ் மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
    அதே நேரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தமிழ் தலைமைகளுடன் பேசும் போது இவர் தவிர்க்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. Why u didn't ask mahinda are u mental ?

    ReplyDelete
  3. கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு மகிந்த,பஷீல் இருவருடனும் தேண் நிலவு கழித்த போது கோரிக்கை விட திரானி அற்ற நீங்கள் மைத்திரி அரசாங்கத்திடம் கடிதம் அனுப்பி உள்ளீர்களே இதன் ராஜரந்திரம் தான் என்ன

    ReplyDelete
  4. Hello, Basheer..
    why didn't ask such a question when your were with your great MR?

    ReplyDelete
  5. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் கலந்து கொல்லாத பஷிருக்கு எமது ஜனாதிபதி மைத்திரியிடம் கோரிக்கை இட என்ன அருகதை உள்ளது?

    ReplyDelete

Powered by Blogger.