அரசியல் ரீதியாக மக்களை திரட்டியிருந்தால், அரசியலிலிருந்து ஓய்வுபெரும் சவாலை ஏற்றுக்கொண்டிருப்பேன் - அசாத் சாலி
நுகோகொடை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஓர்
இனவாத அடிப்படையிலான கூட்டமாகும் என மத்திய மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின்
உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அரசியல் கூட்டமொன்றுக்கு 5000த்திற்கும்
மேற்பட்ட மக்களை திரட்டுமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு சவால்
விடுத்திருந்தேன். எனினும் நுகோகொடவில் நடைபெற்ற கூட்டமானது ஓர் இனவாத அடிப்படையிலான கூட்டமேயாகும்.
பொதுபலசேனா உள்ளிட்ட அமைப்புக்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தக் கூட்டத்திற்கு இனவாத அடிப்படையில் அழைப்பு விடுத்திருந்தது.
இனவாத அடிப்படையில் அன்றி அரசியல் ரீதியாக மக்களை திரட்டியிருந்தால்
நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக விடுத்த சவாலை
ஏற்றுக்கொண்டிருப்பேன். இந்தக் கூட்டம் அரசியல் ரீதியான கூட்டமன்று, இது முழுக்க முழுக்க ஓர் இனவாத அடிப்படையிலான கூட்டமாகும்.
இனவாதத்தை தூண்டும் வகையிலான அறிக்கைகளை விட்டு மக்கள் திரட்டப்பட்டுள்ளனர்.விமல் வீரவன்ச தனது காரியாலயத்திலிருந்து அரசியல் ரீதியான
கூட்டமொன்றுக்கு ஐயாயிரம் பேரை அழைத்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள
முடியும். தனியார் பேரூந்துகளில் இனவாத அடிப்படையில் மக்களை அழைத்து நடத்தப்படும்
கூட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அசாத் சாலி ஊடகங்களுக்கு கருத்து
வெளியிட்டுள்ளார்.
நுகோகொடையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஐயாயிரம் பேரை அழைத்து வந்தால்
அரசியலிலிருந்து விலகுவதாக முன்னதாக அசாத் சாலி சவால் விடுத்திருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயா சாமி .. எல்லாரும் நம்பிட்டாங்க இனியாவது வாயப்பொத்திக்கு மக்கள் சேவையை கவனியும்..பேச்சக் குறை பேச்சக் குறை
ReplyDeleteMR Sally to be blamed for such kind of challenge which not at all important from muslims point of view
ReplyDeleteமிகச்சரியாகக் கூறியிருக்கின்றீர்கள் திரு. அசாத் சாலி.
ReplyDeleteதங்களது சுயநலத்திற்காக அரசியலில் இனவாத நஞ்சைக் கலந்து கலந்து நல்லிணக்கத்தை மாசுபடுத்தும் கூட்டத்தை மக்கள் -குறிப்பாக சிங்கள பவுத்த மக்கள்- முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.