Header Ads



'மக்கள் தேசிய முன்னணி' பத்தோடு பதினொன்றாக, மறைந்து போகுமா..?

-ஷிப்லி-

மாற்று அரசியலின் ஊடாக நல்லாட்சியை நோக்கிய பயணத்தில் மக்கள் தேசிய முன்னணி என்ற புதிய இயக்கம்

“உதிரம் கொண்டு 
உண்மையை வரைவோம்
உழைப்புகள் கொண்டு 
உளியாய் செதுக்கிடுவோம்
நல்லவெரெல்லாம் ஒதுங்கிக்கொண்டால்
நரிகள் தாம் இங்கு கலைஞர்கள்”

மேற்படி புரட்சி வாசகங்களின் மூலமாக நல்லாட்சிக்கான அறைகூவலை அக்கரைப்பற்றில் புதிதாக உதயமாகியிருக்கும் பயணத்தில் மக்கள் தேசிய முன்னணி என்ற புதிய இயக்கம் மாற்று அரசியல் கலாசாரத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் அண்மைய வீழ்ச்சியும், மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்கள் மீது கொண்டு அவநம்பிக்கையும் அக்கரைப்பற்று மண்ணில் ஒரு புதிய அரசியல் இடைவெளியை ஏற்படுதியிருக்கும் இச்சூழலில் இப்புதிய அரசியல் இயக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வருகையின் பின்னர் தேசிய அரசாங்கம் என்ற பதமும் மாற்று அரசியல் என்ற பதமும் இளைஞர்களின் மத்தியில் புதிய அலையாக உருவெடுத்துள்ள அதேவேளை அரசியலின் ஊடாக சமத்துவத்தையும், சமாதானத்தையும், அபிவிருத்தியையும் இலகுவில் அடையமுடியும் என்ற நம்பிக்கை விதை எல்லோர் மனதிலும் தூவப்பட்டுள்ள இந்நிலையில் இதுவும் ஒரு சாதாரண அரசியல் அமைப்புத்தான் என்ற சலிப்பை ஏறபடுத்தாமல் மனதளவில் இவ்வியக்கம் மக்களுக்கானது என்ற ஆரம்ப நம்பிக்கையை வலுவாக ஊன்றியுள்ளது.

சேகுவேராவின் கொள்கைகளை அடியொற்றியதாக தங்களின் பிரசாரங்களை இணையத்தளங்கள் மூலமாகவும் துண்டுப்பிரசுரங்கள் வாயிலாகவும் இவ்வியக்கம் தங்களின் ஆரம்ப நகர்வுகளை முன்னெடுக்கிறது.

மக்கள் தேசிய முன்னணியின் புரட்சி வாசகங்களில் சில

·         எத்தனை கட்சிகள் இருந்தாலும் எத்தனை அமைச்சுக்கள் இருந்தாலும் இலங்கைச்சோனகர் இன்று அநாதைதான். கொள்கைகளற்ற வெறும் வெற்றுக் கோஸங்களிலே தங்களது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் தலைமைகள் இன்னும் வெகுநாள் இந்தச்சமூகத்தை ஏமாற்றி விட முடியாது. சமூகம் விழித்துக்கொள்ளும் நாளும் தொலைவில் இல்லை அன்று இவர்கள் கைசேதப்படுவதை யாராலும் தடுத்துவிட முடியாது.

·         இலங்கைச்சோனகர் என்பது ஓர் தேசியம், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒரு தேசியத்திற்கான அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது இனவாதம் அல்ல உலகளாவிய ரீதியில் ஏற்றக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளில் ஒன்று. இந்த உரிமையை வெண்றெடுப்பதற்கான பயணத்தை இன்றுவரை நாம் முன்னெடுக்காது இருப்பது நம் தலைமைகளின் ஆற்றாமையையும் நம் அடிமைத்தனத்தையும் தான் பறைசாற்றுகின்றது.

·         தெளிவான கொள்கைளோடும் தீரக்கமான முடிவுகளோடும் நல்லாட்சிக்காய் அடியெடுத்து வைக்கும் நம் வாரிசுகளை ஏற்றுக்கொள்ள நம் முஸ்லீம் சமூகம் தயாராக இருந்தால் இன்னும் சொற்பக்காலத்தில் ஜக்கிய இலங்கைக்குள் எம் அரசியல் அபிலாசைகள் யாவும் நிறைவேறுவது கண்கூடு

இன்னும் 91 நாட்களில் தமது கொள்கைப்பிரகடனத்தை வெளிப்படுத்தவுள்ள இவ்வியக்கம் பத்தோடு பதினொன்றாக மறைந்து போகுமா? அல்லது மக்கள் மனங்களை வென்று புதிய வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


No comments

Powered by Blogger.