ரவூப் ஹக்கீமை விமர்சிப்பது, எந்த விதத்தில் நியாயமாகும்..?
எம்.எல்.பைசால் (காஷ்பி)
ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டை பல விடுத்தம் ஆட்சி செய்த கட்சி என்பதனாலும் சுதந்திர இலங்கையின் முதலாவது ஆட்சி அமைத்த கட்சி என்ற வகையிலும் அதன் தலைவர்கள் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் என்ற காரணத்தினாலும் எம் நாட்டில் அதற்க்கான நிரந்தர ஆதரவு தளம் மக்கள் மத்தியில் என்றும் இருந்து கொண்டே இருந்து வந்துள்ளது. இருப்பினும் சந்திரிகா பண்டர்நயாக்க அவர்களின் அரசியல் பிரவேசத்தின் பிற்ப்பாடு அக்கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தினைபிடிப்பது மிககஸ்ட்டமாகவே இருந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை அறிமுகப்படுத்தி பல அபிவிரித்திகளை செய்து நாட்டுக்கு முன்னுதாரணமாக தன்னை அடையாளப்படுத்திய அக்கட்சிக்கு இறுதி வரை அப்பதவியினை பெற முடியாத அளவுக்கு சென்றுள்ளதை நாம் அறியலாம்.
பாராளுமன்றத்திலாவது தனது அதிகாரத்தினை பெறுவதற்கு அது பல விடுத்தம் முயற்சி செய்தும் உரிய பலன் கிடைக்க வில்லை.சந்திரிக்க பண்டர்நாயக்கா உடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சி தோற்று ஒருவித தொய்வு நிலையிலேயே இருந்தது.
1994 ம் ஆண்டு முதல் அது சகல தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தே வந்தது.
2000 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் சுதந்திர கட்சியின் தலைமையில் உள்ள பொது ஜனமுன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.இத்தேர்தலிலும் ஐகிய தேசிய கட்சி 89 ஆசனங்களை பெற்று தோல்வியைத்தழுவியது.
அதேநேரம் மு.க அம்பாரை மாவட்டதில் பொது ஜனமுன்னணியில் போட்டியிட்டு அம்பாரை மாவாட்டம் இழந்துநின்ற3 முஸ்லிம் ஆசனங்களைபெற்றுவரலாறுபடைத்தது.அமையபெற்றபாராளுமன்றத்தில்மு.கஉம்சேர்ந்துஆட்சிஅமைத்தது.
.
2001 ம் ஆண்டு மாவனல்லையில் ஏற்பட்ட கவலரத்தினை கட்டுப்பட்டுக்குள் அரசு கொண்டு வருவதற்கு தவறி விட்டது என மு. க தலைவர் ஆட்சியாளர்களின் அசமந்த போக்கிற்கு எதிராக பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் போது அன்றைய ஜனாதிபதி அவர்கள் மு. க தலைவர் ஐ .தே உடன் சேர்ந்து அரசுக்கு எதிராக ஈடு படுகின்றார் என குற்றம் சுமத்தி அவரை அமைச்சரவையில் இருந்து விலக்கினார். இதனால் மு. க இரு கூறுகளாக மாறியது. பெரும் பன்மை பலத்தை இழந்த ஆளும் கட்சி சொற்ப காலம் ஜே.வீ .பி உடன் சேர்ந்து ஆட்சி அமைத்தாலும் தொடர்ந்தும் அதனை கொண்டு செல்ல முடியாமல் பாராளுமன்ற தேர்தலுக்கு 2001 ம் ஆண்டு அழைப்பு விடுத்தது.
2001 ம் ஆண்டு மு. க. ஐ .தே கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தி அத்தேர்தலில்போட்டியிட்டு நீண்ட இடைவேளைக்குக்குப் பின்னர் மு .க (05 உறுப்பினர்கள்) உதவியுடன் ஐ.தே (109உறுப்பினர்கள் ) சேர்த்து ஐ .தே கட்சி ஆட்சி அமைத்தது.
1994 ம் ஆண்டிலிருந்து 2000 ம் ஆண்டு வரையான சகல தேர்தல்களிலும் வெற்றி கனியினைருசிப்பார்க்க முடியாமல் இருந்த ஐ.தே. கட்சியினை ஆட்சிபீடம் ஏற்றி அழகு பார்த்ததுமு,க.ஐ.தேகூடடே
இரண்டரை வருடங்கள் தொடர்ந்த அவ்வாட்சியினை அன்றைய ஜனாதிபதி கலைத்து விட்டார். (பிற்பட்ட காலங்களில் அதன் தவறினை அவர் உணர்ந்தது வரலாறாகும்.)
2004.2010 நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்கள். 2008 ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைதேர்ததல் ஜனதிபதி தேர்தல்கள் போன்ற சகல தேர்தல்களிலும் மு. க கூட்டு தொடர்ந்தது.
.
2005 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மு .க தலைவரும் அதன் கட்சி உறுப்பினர்களும் ஐ .தே க தலைவரின் வெற்றிக்காக அதிக அக்கறை எடுத்திருந்தனர் இரவு பகலாக அதற்காக உழைத்தனர்,ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்கு செய்யப்பட்ட சூழ்ச்சியினை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
2008 ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஐ. தே கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தினை பெற காரணம் இரு கட்சிகளின் கூட்டே எனலாம்.
மகிந்த ராஜபக்ச என்ற இரும்பு மனிதனை எதிர்த்தே மு. க சகல தேர்தல்களிலும் பிரசாரத்தினை முன்னெடுத்தது. .மு. க வில் இருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மு. க. ஐ தே கட்சி கூட்டை பற்றி மிகப்பிழையாக விமர்சித்துக்கொண்டு மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கினை குறைக்க முற்பட்டுக்கொண்டேஇருந்தனர் பலவிதமானவிமர்சனங்களையும்தாங்கிக்கொண்டேமு.க ஐ.தஉடன் வலம் வந்தது.
ஆளும் கட்சியின் வசீகரத்தினால் தாக்குண்டு பலர் அதில் சேர்ந்து கொண்டனர் அது ஐ .தே கட்சி உறுப்பினர்களை கூட விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் மு .க வும் தன் கட்சியினை பாதுகாப்பதற்க்காக சேர்ந்து கொண்டதே தவிர ஐ .தே க வினை எதிர்த்து அது செல்லவில்லை. இதேவேளை ஐ .தே கட்சி தலைமைய்த்துவம் மு. க வின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி அதன் தலைவர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் வாய்மை தாவறா தலைவர் என்பதை நிரூபித்து காட்டியது.
இவ்வாறான பின்னணியினை கொண்ட இக்கட்சியினையும் அதன் தலைமைத்துவதினையும் அதன் கிழக்கு மகான சபை தலைவர் விமர்சிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
மு. க கிழக்கில் ஆட்சி அமைக்க இருப்பதை அவர் எதிர்த்து தனது தலைமையில் 4 உறுப்பினர்களை கொண்ட அவர் ஆட்சி அமைப்பதை விட 7 உறுப்பினர்களுடன் ஏறகனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மு. க அதற்க்கான சந்தர்பத்தினை கோரும்போது அதனை இன்முகத்துடன் வரவேற்ப்பது தான் அவர் மு.க விர்க்கு செய்யவேண்டிய கைமாறாகும்.
மு .க கட்சிக்கு கிடைக்கபெற்றிருக்கும் முதல் அமைச்சின் மூலம் அது கிழக்கில் சிறந்த ஆட்சியினை ஏற்படுத்தி மூவின மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே எம் எதிர்பார்ர்ப்பாகும்.
இதேவேவளை எதிர்வரும் தேர்தலில் மு. க ஐ தே உடன் சேர்ந்தே போட்டி இட இருக்கும் இந்த நிலையில் அதன் கிழக்கு மகாண சபை உறுப்பினர்கள் புரிந்துணருடன் நடந்து ஆட்சியில் பங்கு கொண்டு இருப்பதே நன்று. எதிர்கால தேர்தல் ஐ தே க இந்த நாட்டில் சிறந்த ஆட்சியினை மு க உடன் சேர்ந்து முன்னெடுக்க துணை புரியும் இன்ஷா அல்லாஹ்.
.jpg)
Why can't we criticize against ? Who sent him to the parliament ,as everybody know about it
ReplyDelete