றிசானா நபீக்கின் மரண தண்டனைக்கு, ஜனாதிபதி மைத்திரியின் செயலாளரா காரணம்..?
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் றிசானா நபீக் விவகாரத்துக்கு ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபயக்கோன் பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ,
“றிசானா நபீக்கிற்கு வயதைக் கூட்டி போலியான கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு கையொப்பம் இட்டவர் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரேயாவார். சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற றிசானாவுக்கு 2013 ஜனவரி 09ஆம் திகதி சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். பீ.பி.அபேகோன் குடிவரவு கட்டுப்பாட்டாளராக இருந்தபோது கப்பம் பெற்றார். பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு இலங்கை கடவுச்சீட்டு தயாரித்து கொடுத்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடன் அவர் மிகவும் நெருக்கிய உறவை வைத்திருந்தார். றிசானாவை அனுப்பிய முகவரின் வாக்குமூலம் எம்மிடம் உள்ளது” என்றார்.
.jpg)

ஓஹோ! அப்படியா விடயம்?
ReplyDeleteதனக்கு கண்போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு குருடனைப்பார்த்த சகுனம் பிழைக்கட்டும் என்று சிந்திக்கும் அளவுக்கு வீரவன்சவுக்கு சித்தம் கலங்கிவிட்டது போலும். எல்லாமே உங்கள் முன்னாள் பெரியவரின் அதிகாரத்தின் கீழ் நடைபெற்றதுதானே..?
றிஷானா நபீக் மரண தண்டனை (அல்லது சட்டத்தின் பெயரால் செய்யப்பட அநீதியான படுகொலை) என்பது நடந்து முடிந்துவிட்ட ஒரு சோகச் சம்பவம். தயவு செய்து அந்த அப்பாவிப் பெண்ணின் பெயரை விற்று அரசியல் நடத்தும் கேவலமான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே வேண்டாம். றிஷானா நபீக் மூதூரிலிருந்து கொழும்பிற்கு வந்த பஸ் சாரதி மீதும் நாளை குற்றம் சொல்வார்கள் அரசியல்வாதிகள், அவர் ஏதாவது அரசியல் பதவிக்கு வந்தார் என்றால்...... ஆகவே இப்படியான மோசமான அரசியல் செய்திகளை ஜப்னா முஸ்லிம் போன்ற முஸ்லிம் ஊடகம் புறக்கணிக்க வேண்டும். றிஷானா நபீக்கை விற்று பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே வேண்டாம்.
ReplyDelete