Header Ads



சிறந்த பாராளுமன்றத்திற்கான பிரதிநிதித்துவத்தை, வழங்குவதே எமது அடுத்த பயணமாகும் - அநுரகுமார

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறந்த பிரதிநிதித்துவத்துடனான பாராளுமன்றமொன்றை உருவாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

கிரிபத்கொட பகுதியில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

“யதார்த்தவாத நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான புத்திஜூவிகள் உரை” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றது.

ஜனநாயகத்திற்கான சுதந்திரத்தை விஸ்தரிப்பதற்கான முயற்சியில் எமது பங்களிப்பு என்ன? அதற்கு தேவையான வியூகத்தை வலுப்படுத்த முடியுமா என நாம் சிந்திக்கின்றோம். அதற்கு பின்னர் எமக்கான மற்றுமொரு பயணமொன்று உள்ளது. ஜனநாயகத்திற்கான வியூகத்தை வலுப்படுத்துவதற்காக நாம் ஜனவரி 8ஆம் திகதி வரை அரசியல் பயணமொன்றை முன்னெடுத்தோம். அதற்கு பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டியுள்ளது. 

சிறந்த பாராளுமன்றத்திற்கான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காக அதில் போட்டியிடுவதே எமது அடுத்த பயணமாகும். இந்த அரசியலமைப்பு திருத்தம் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், 2020 ஜனவரி அல்லது ஜூன் காலப் பகுதியில் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும். இந்த நான்கரை வருடங்களை மிக பெறுமதியான வருடங்காக மாற்றுவதே எமது இலக்காக காணப்படுகின்றது. இந்த நாட்டின் ஆட்சியை நாம் மாற்ற வேண்டும். அதற்காக 2020 வரையான நான்கரை வருடங்களை பரந்த அடிப்படையிலான முன்னியொன்றை கட்டியெழுப்ப நாம் எதிர்பார்க்கின்றோம் 

No comments

Powered by Blogger.