Header Ads



மூதூர் நகரம், பல்வேறு வசதிகளையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்படும் - ரவூப் ஹக்கீம்


மூதூர் நகரம் விரைவில் நவீன மயப்படுத்தப்படுவதோடு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் ஈர்க்கக்கூடிய வகையிலும், பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையிலும் அபிவிருத்தி செய்யப்படுமென நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (22) மூதூருக்கு விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீம், போக்குவரத்துப் பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் மக்களின் அமோகமான வரவேற்பிற்கு மத்தியில், வீதிகளினூடாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

போக்குவரத்துப் பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீகின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூதூர் பஸ் டிப்போவில் எரிபொருள் நிரப்பு இயந்திரத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் ஹக்கீம் மூதூர் நகரம் பல்வேறு வசதிகளையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்படுமென தெரிவித்தார்.

பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கும், புதிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் வழிகாட்டுதலின் கீழ் மூதூர் மற்றும் கிண்ணியா நகரங்களும் திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய கிராமங்களும் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடகச் செயலாளர்


No comments

Powered by Blogger.