Header Ads



அக்குறணை ஹெல்பிங் ஹேண்ட்ஸ் அமைப்பின், சுதந்திர தின நிகழ்வும் சிரமதானமும்

-அப்துல்லாஹ்-

அக்குறணை ஹெல்பிங் ஹேண்ட்ஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திரதின நிகழ்வு அக்குறணை ஸியா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. அக்குறணை ஸியா வைத்தியசாலை வைத்திய அதிகாரி  ரஹ்மத் சாலி அவர்களது தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் சர்வமதத் தலைவர்களும் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் அங்கத்தவர்களும், பொது மக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அன்றைய தினம் ஊர் மக்களது ஒத்துழைப்புடன் பொது சிரமதானம் ஒன்றையும் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்றைய தினம் உடைந்திருக்கின்ற வைத்தியசாலை வீதியைப் புனர்நிர்மாணம் செய்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அக்குறணையில் இயங்கி வருகின்ற ஹெல்பிங் ஹேண்ட்ஸ் கடந்த சில வருடங்களாக பல்வேறு சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், சகல இன மக்களது பாராட்டையும்இ அபிமானத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.