Header Ads



பொத்துவில் மக்களுடன், பைசால் காசீம் சந்திப்பு


-மு.இ.உமர் அலி-

பாராளுமன்ற உறுப்பினர்  பைசால் காசீம் அவர்களுக்கும்  பொத்துவில் பிரதேசசபையின்  தவிசாளர் , மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது  நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பொத்துவில் பிரதேசத்தின் பிரதானமான  பலபிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டது. இருப்பினும்  ஊர் பிரமுகர்களால்  பின்வரும் மூன்று பிரதானமான பிரச்சனைகளை  உடனடியாக தீர்த்துவைக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

1. பொத்துவிலுக்கான  தனியான  கல்விநிருவாக வலயம் ஒன்றை உருவாக்கி வலயக்கல்விப்பணிமனை  அமைத்தல்.

 2. பொத்துவில்  தளவைத்தியசாலையை  மத்திய அரசின் நிருவாகத்தின் கீழ்  கொண்டு வருதல்.

3. பொத்துவிலில் இயங்கும்  உப  பஸ் டிப்போவைவை  தனியான  டிப்போவாக  தரமுயர்த்துதல்

மூன்று கோரிக்கைகளையும்  செவிமடுத்த பாராளுமன்ற  உறுப்பினர். உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை,முஸ்லீம்கள்  செறிந்து வாழும் நிலத்தொடரிலிருந்து  சற்று தூரமாக வாழும் பழமை வாய்ந்த  ஒரு ஊர்தான் பொத்துவில்.நூறு நாள் திட்டத்தின் கீழ்  பொத்துவில்   உப சாலையை தனியான ஒரு  சாலையாக தரமுயர்த்த நடவடிக்க  எடுப்பேன். என்று கூறினார்.கல்வி வலையம் பற்றி நான் ஏற்கனவே பல முயற்சிகள் எடுத்துள்ளேன் அதில் பல வழிகளிலும் முட்டுக்கட்டைகள்  ஏற்பட்டன,இன்னும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன இருப்பினும் இம்முறை  மாகாண  அமைச்சுக்கள்  வளங்கப்பட்டபின்னர் இதுபற்றி  நடவடிக்கைகளை மேற்கொள்ள  இருக்கின்றேன் என்று கூறினார்.

வைத்தியசாலையை  மத்திய அரசின் கீழ்  கொண்டுவருவதற்கு  சகோதரர் ராஜாங்க அமைச்சர்  ஹசன் அலி அவர்களுடன் கலந்துரையாடி இதை எவ்வாறு  செய்வது என்று   ஆலோசனைகளை பெற இருக்கின்றேன் என்று கூறிய  பாராளுமன்ற உறுப்பினர்,கடந்த தேர்தலில் பொத்துவில் மக்கள் எனக்கு வாக்களித்ததற்கு நான் இதுவரை என்னாலான  சேவைகளை வழங்கியிருக்கின்றேன்,இன்னும் வழங்கவே  முயன்று கொண்டிருக்கின்றேன்  இவ்விடயம் நீங்கள் அனைவரும்  நன்கறிந்ததே  என்றும் குறிப்பிட்டார்.


4 comments:

  1. He can't do anything Mr unarmed Ali he will prepare for local election gain some vote from Pottuvil people through some Pottuvil brokers

    ReplyDelete
  2. தனது பிறந்த ஊரான நிந்தவூர் வைத்தியசாலையில் போதிய மருந்தைக் கூட பெற்றுக் கொடுப்பதற்கு முடியாத இவர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சுகாதார ராஜாங்க அமைச்சர் ஹஸன்அலி துணையால் செய்ய இருக்கின்றாராம். ஹஸன்அலியும் நிந்தவூர்தான்.

    ReplyDelete
  3. Election cam started in pvl keep it up ... pls thing about NTR HOSPITEL , pls joint hand with NTR pradeseyasaba .

    ReplyDelete
  4. நாங்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரா்கள்.....

    ReplyDelete

Powered by Blogger.