வகுப்பறையில் மாணவனைக் கண்டித்ததால் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் - கொழும்பில் சம்பவம்
தனது மகனை ஆசிரியர் அடித்ததனால் அச்சிறுவனின் தந்தை பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று கொழும்பில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
இப்பாடசாலையில் ஏழாம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவனொருவன் தவறு செய்துள்ளமையினால் ஆசிரியர் மாணவனை கண்டித்து, அடித்துமுள்ளார்.
ஆசிரியர் தன்னை அடித்ததை அம்மாணவன் தனது தந்தைக்கு தெரிவித்துள்ளான். இதனால் கோபமடைந்துள்ள தந்தை, மகனையும் அழைத்துக்கொண்டு பாடசாலையின் ஓய்வறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இந்த ஆசிரியரை தாக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
இத்தாக்குதல் தொடர்பில் ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், தனது மகனை ஆசிரியர் தாக்கியுள்ளாரென தாக்குதல் நடத்தியவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்விரு முறைப்பாடுகள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
Post a Comment