Header Ads



மஹிந்த எதிர்த்ததை, மைத்திரி பாராளுமன்றத்தில் சட்டமாக்கினார்..!

சிகரெட் பக்கட்டுக்களில் 80 வீத எச்சரிக்கை பிரசுரிப்பை மேற்கொள்ளவேண்டும் என்ற திருத்த சட்டமூலம் இன்று 20-02-2015 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே 60 வீத எச்சரிக்கை சிகரெட் பக்கட்டுக்களில் பிரசுரிக்க வேண்டும் என்ற சட்டமூலம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

எனினும் அதனை நடைமுறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்த்து வந்தார். இந்தநிலையிலேயே 80 வீத எச்சரிக்கை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தின்படி சிகரெட் விற்பனை செய்யும் கடைகளில் 80 வீத எச்சரிக்கை என்ற விளம்பர பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், அபராதம் செலுத்த வேண்டும் என்ற திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.