Header Ads



அரசியல் வாதிகளிடம், கேள்வி தொடுக்க வாசகர்களுக்கும் சந்தர்ப்பம்..!

நாம் இங்கு 25 பேர்களடங்கிய பட்டியலொன்றைத் தயாரித்துள்ளோம். இந்த நபர்களை குறுக்கு விசாரணை என்ற நிகழ்ச்சியூடாக ஊடகவியலாளர் நஜீப் பின் கபூர் சந்தித்து அவர்களிடத்தில் இந்தக் குறுக்கு விசாரணையை மேற்கொள்ளவிருக்கின்றார்.

சந்திப்பில் பதிவு செய்த தகவல்களை ஊடகங்களில் வெளியிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நமது வாசகர்களுக்கும் இந்த நிகழ்சியில் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க எண்ணி இருப்பதால் அவர்களது கேள்விகளையும் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இதில் ஆர்வமுள்ளவர்கள் தமது கேள்விகளை jaffnamuslim1990@yahoo.com என்ற ஈமேல் முகவரிக்கு இன்றிலிருந்து 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். 

ஒருவர் ஒரு கேள்வியை மட்டுமே அனுப்பிவைக்க முடியும். கேள்விகளை அனுப்புகின்றவர்கள் தமது பெயர், எவரிடம் கேள்விகளை முன்வைப்பது, விரும்பினால் தமது முகவரி, தொலைபேசி விரபரங்களையும் அனுப்பிவைக்கலாம். 

-நன்றி 

குறுக்கு விசாரணை நிகழ்ச்சிக்கு உற்படுத்தப்பட இருப்பவர்கள்

01. மாதுலுவாவே சோபித தேரர்
02. அதுருலியே ரதன தேரர்
03. உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி
04. ஜனாதிபதி மைத்திரிபல சிரிசேன
05. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ
06. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
07. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ
08. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
09. ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க
10. ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச
11. தமிழர் விடுதலைக் கூட்டணி சிரேஸ்ட தலைவர் இரா.சம்பந்தன்
12. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
13. தேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன்
14. முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க
15. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன
16. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்ணேஸ்வரன்
17. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசனலி
18. முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபே ராஜபக்ஷ
19. பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவன் -ராவய
20. கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார
21. முன்னாள் புலிகளின் நிதிப் பெறுப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி.) 
22. சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவர் கருணா அம்மான்
23. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் அறுமுகம் தொண்டமான்
24. ஐக்கிய தேசியக் கட்சித் செயலாளர் கபீர் ஹசிம்
25. தேசிய பட்டியல் முன்னாள் உறுப்பினர் அஸ்வர்

குறிப்பு:-மூன்று மாதங்களுக்குள் குறுக்கு விசாரணை நிகழ்ச்சியை நிறைவு செய்ய உத்தேசம்.

1 comment:

  1. நல்லவிடயம். ஆயினும் ஒருவருக்கு ஒரு வினா என்ற கட்டுப்பாடு அனாவசியமானது என்று தோன்றுகின்றது. ஒரே நபர் சிறந்த பல கேள்விகளைக் கேட்கும் ஆற்றலுள்ளவராக இருக்கலாமல்லவா? தவிர, வேறுவேறு அரசியல்வாதிகளிடத்தில் வேறுபட்ட விடயங்களில் வினா எழுப்பக்கூடிய வாய்ப்பும் ஒருவருக்கு இருக்கலாம்.

    இதனை மனதிற் கொண்டு கட்டுப்பாட்டைத் தளர்த்துங்கள். இதற்கு மாற்றாக, எத்தனை கேள்விகளும் கேட்கப்படலாம். கேள்வியின் முக்கியத்துவத்தை ஒரு தகுதியாக வைத்து தெரிவு செய்யப்படும் எனும் நிபந்தனையை வைக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.