Header Ads



இலங்கையிலிருந்து கிடைத்த 8.7 மில்லியன் ரூபாவை திருப்பி வழங்குகிறார் பாப்பரசர்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களுக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபை வழங்கிய நன்கொடையை இலங்கைக்கே மீண்டும் பரிசளிக்க பாப்பரசர் தீர்மானித்துள்ளார்.

கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் சமூக சேவை நிதியத்திற்கு 8.7 மில்லியன் ரூபாவை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபையினால் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த பணத்தை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வழங்க பாப்பரசர் தீர்மானித்துள்ளார்.

இந்த பணத்தில் இலங்கையில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்து அது தொடர்பான அறிக்கை சமர்பிக்குமாறு பாப்பரசர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கத்தோலிக்க ஆயர்கள் சபையினால் குறித்த பணத்தொகையை ஏழை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.