‘‘மக்களை கொல்லும்படி, அல்லாஹ் ஆணையிட்டாரா..? (இஸ்லாமிய தேசத்தை திட்டிய 87 வயது மூதாட்டி)
சமீபகாலமாக இணையத்தில் வைரலாகப் பரவி, டாக் ஆஃப் தி டாட்காம் ஆக வலம் வருகிறது ஈராக்கைச் சேர்ந்த 87 வயது பாட்டியின் வீடியோ. அவரின் ‘தில்’லான செய்கையைக் கண்டு, உலகமே கைதட்டி ஆர்ப்பரிக்கிறது. பாட்டி என்ன செய்தார் என்கிறீர்களா?
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, ஜோர்டான் நாட்டு விமானப் படை, ஐஎஸ்ஐஎஸ் களின் இருப்பிடத்தில் குண்டு வீசிக் கலைத்தபோது, காரில் தப்பிய ஒரு ஐஎஸ்ஐஎஸ் குரூப்பை மடக்கி, அரேபியன் ஸ்டைலில் திட்டித் தீர்த்தி விட்டாராம் பாட்டி.
‘‘மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கச் சொல்லி, அந்த அல்லாதான் உங்களுக்கு ஆணையிட்டாரா? அல்லது அவருக்கு அர்ப்பணிக்கிறீர்களா? நான் சத்தியமாகச் சொல்வேன் - நீங்கள் யாரும் கடவுள் வழியில் செல்லவில்லை. நீங்கள் அனைவரும் சாத்தான்களடா! சொல்லுங்கடா! கொலை பண்ணி என்ன சாதிக்கப் போகிறீர்கள்? உங்களுக்கு என்னடா வேண்டும்? அமைதியான வழியில் உங்களுக்குப் போராடத் தெரியாதா? கொலை செய்வது சட்டத்தில் மட்டுமில்லை; மனித குலத்திலேயே தடை செய்யப்பட்ட விஷயம். அதைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் யாரையும் கொலை செய்யாதீர்கள்... உங்களையும் யாரும் கொல்லமாட்டார்கள்!’’ என்று அந்தப் பாட்டி ஆக்ரோஷமாகக் கத்தியது, வீடியோவாக வெளியாகி இருக்கிறது.
ஆனால், அதற்கடுத்து அந்தப் பாட்டி என்ன ஆனார் என்பது ரகசியமாக இருப்பதால், பாட்டிக்காக ப்ரே பண்ணுகின்றனர் ஈராக் மக்கள்.

Post a Comment