Header Ads



மஹிந்தவின் காலத்தில் 72, மைத்திரியின் காலத்தில் 17

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்திற்கு 17 பேரைக் கொண்ட குழுவொன்று மட்டுமே பங்கேற்க உள்ளது. ஜனாதிபதி செயலகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு விஜயத்தின் ஊடாகவே, வெளிநாட்டு விஜயங்களுக்கான செலவுகளை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான பிரதிநிதிகளுடன் வெளிநாட்டு விஜயத்தை செய்வதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்திய விஜயம் மேற்கொண்ட போது அமைச்சர்கள் உள்ளிட்ட 72 பேர் விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

நாளை ஜனாதிபதி இந்திய விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசேட விமானமொன்றில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவில்லை எனவும், ஏற்கனவே இந்தியா பயணிக்கவிருந்த விமானமொன்றில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.