Header Ads



இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களிடையே மோதல்: 4 பேர் படுகாயம்

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தை தொலைக்காட்சி மூலம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகக் கோப்பையையொட்டி ஆஸ்திரேலியாவில் பல கிரிக்கெட் கிளப்கள், ரசிகர்களுக்கு தொலைக்காட்சியில் போட்டியை ஒளிபரப்புகின்றன. நூற்றுக்கணக்கானோருடன் இணைந்து கிரிக்கெட் பார்ப்பதால் இந்த கிளப்களில் ரசிகர்கள் வெள்ளம் அலை மோதுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மேரிலேண்ட்ஸ் ஆர்எஸ்எல் கிளப்பில் சுமார் 180 பேர் கண்டுகளித்தனர். 

அப்போது வெற்றி தோல்வி குறித்து பேசிக்கொண்டிருந்தபோது ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென இரண்டு குழுவினரும் தங்கள் கைகளில் கிடைத்த பொருட்களை வைத்து மற்றவர்களை தாக்கினர். இதனால் அப்பகுதியே கலவர பகுதியாக காட்சியளித்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரை வெஸ்ட்மெட் மருத்துவமனையிலும் லேசான காயமடைந்த ஒருவரை ஆபர்ன் மருத்துவமனையிலும் சேர்த்தனர்.

சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், வழக்கு தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

1 comment:

  1. The foolish people only keep doing such things! Cricket is just a sport. We should learn to taste and tolerate both win and lose.

    ReplyDelete

Powered by Blogger.