சவுதி அரேபியாவில் பெண் உடையணிந்து, கொள்ளையடித்த 4 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டது

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் போதை கடத்தல் போன்ற குற்றங்களுக்கு தலை துண்டித்தல் போன்ற கடுமையான தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அதன்படி 4 கொள்ளையர்களுக்கு நேற்று தலை துண்டிக்கப்பட்டது. இவர்கள் பெண்களை போன்று உடையணிந்து ஆண்களை கவர்ந்திழுத்தனர். பின்னர் அவர்களை தனியிடத்துக்கு அழைத்துச் சென்று கொள்ளையடித்து விட்டு கொலை செய்தனர்.
இந்த தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் குவாடிப் நகரில் உள்ள சிறையில் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டின் இவர்களையும் சேர்த்து 25 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Post a Comment