சவூதி அரேபியாவில் 3 இலங்கையர்களின் மரண தண்டனை, மீண்டும் உறுதியானது..!
-Nf-
ஏமன் பிரஜை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக மூன்று இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி அரேபியாவின் ஜித்தா உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
சவூதி பிரதம நீதியரசர் தலைமையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அரபு செய்தி சேவை தெரிவித்துள்ளது.
கொள்ளை மற்றும் கொலை குற்றச்சாட்டுகளில் குறித்த மூன்று இலங்கையர்களும் குற்றவாளிகளாக அடையாலம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குறுதிப் பணம் வழங்குவதன் மூலம் குற்றவாளிகள் மன்னிப்பு கோர முடியாது என ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளதாகவும் அரபு செய்தி சேவை தெரிவித்துள்ளது
60 வயதான ஏமன் பிரஜையே 2007 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment