Header Ads



ஏமனில் 2000 ராணுவ வீரர்கள் சிறை பிடிப்பு

ஏமனின் தெற்கு பகுதியில் அல்– கொய்தாகளும் அதன் தோழமை அமைப்பான அன்சர் அல்–ஷிரியாகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

தெற்கு பகுதியில் உள்ள ஷப்வா மாகாணத்தில் ராணுவ தளம் உள்ளது. நேற்று அங்கு அன்சர் அல்–ஷிரியா வாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் அதிரடியாக புகுந்தனர்.

பின்னர் அங்கு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவமும் தாக்கியது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. முடிவில் ஷப்வா ராணுவதளத்தை கைப்பற்றினர்.

மேலும் அங்கிருந்த 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து சிறைபிடிக்கப்பட்டனர். 

No comments

Powered by Blogger.