Header Ads



வெலே சுதாவுக்கு வந்த 1000 கிலோ ஹெரோயின் - 130 பேரிடம் வாக்குமூலம்

-vi-

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரரான வெலேசுதாவுக்கு பாகிஸ்தானிலிருந்து 1000 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோகண தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டிலிருந்தே 1000 கிலோ ஹொரோயின் கடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஹமட் சித்திக்  என்ற நபரே வெலே சுதாவுக்கு போதைப் பொருள்களை விநியோகித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 130 பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.