முஸ்லிம்களின் கைகளில் உள்ள ஆயுதம், மைத்திரியின் வெற்றியை தீர்மானிக்குமா..?
கடந்த வருடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேலோங்கிய பௌத்தசிங்கள இனவாதத்தை முறியடிப்பதற்கும், அந்த இனவாதத்திற்கு ஆசிர்வாதம் வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு தக்க பாடம் புகட்டுவதற்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மிக அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது.
விலை மதிப்பற்றதாக கருதப்படும் 'வாக்கு'' இலங்கை முஸ்லிம்களில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது. இந்த பெறுமதிக்க வாக்கு எனும் ஆயுதத்தை நமது முஸ்லிம்கள் புத்திசாதூர்யமாகவும், உரியமுறையிலும் பயன்படுத்துவார்களாயின், மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றியின் பிரதான பங்காளர்கள் என்ற அடைமொழி நிச்சயமாக இலங்கை முஸ்லிம்களை வந்தடையும்.
அதுமாத்திரமல்லாமல், மஹிந்த ராஜபக்ஸ அல்ல, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு பௌத்தசிங்களவர் ஆடசிபீடமேறினாலும், அவர்களை வீழ்த்தவும் முஸ்லிம்களாகிய எங்களால் முடியுமென்பதை நிரூபீக்கவும் வேண்டிய தேவை நமக்கு உள்ளது.
அப்போதுதான் மைத்திரிபால சிறிசேனாவாகட்டும் அல்லது அடுத்துவரும் வரவிருக்கும் அரசாங்கமாகட்டும் முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறைகளை ஏவிவிடுவதையும், அதனை வேடிக்கை பார்ப்பதையும் நிறுத்திக்கொள்ளும்.
20 இலட்சம் சனத்தொகையை கொண்ட, இலங்கை முஸ்லிம்களில், சுமார் 14 இலட்சம் இலங்கை முஸ்லிம்கள் வாக்களிக்கும் தகுதியை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
ஆம், 14 இலட்சம் இலங்கை முஸ்லிம்களிடம் தற்போது ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த ஆயுதங்கள் 8-1-2015 காலை 7 மணி தொடக்கம், மாலை 4 மணி வரை மட்டுமே பயன்படுத்தமுடியும்.
இந்த வாக்கு எனும் ஆயுதத்தை முஸ்லிம்களாகிய நாம் உரியமுறையில் பயன்படுத்துவோம். முஸ்லிம்களின் விருப்பம் மைத்திரிதான் என்றால், அந்த மைத்திரியின் வெற்றியில் முஸ்லிம்களாகிய நாம், அதீத பங்காளர்களாகுவோம்..!
.jpg)
யா அல்லாஹ்! எமது பாவங்களின் காரணமாக, உன்னை அஞ்சாத, எம்மீது இரக்கம் காட்டாத தீய ஆட்சியாளனை மீண்டும் எமக்கெதிராக சாட்டிவிடாதே. யா அல்லாஹ்! மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பதில் எம்மை சோதனை செய்யாதிருப்பாயாக.
ReplyDelete